ETV Bharat / city

கரோனாவால் பழங்குடியினரின் பள்ளி குழந்தைகள் கல்வி பாதிப்பு

பழங்குடியின மக்களுக்கு சத்தான உணவு, கரோனா சிகிச்சை மையம் மற்றும் மாணவர்களுக்கான கல்வி எவ்வாறு வழங்கப்படுகிறது என்பது குறித்து தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்ய மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கரோனாவால் பழங்குடியினரின் பள்ளி குழந்தைகள் கல்வி பாதிப்பு
கரோனாவால் பழங்குடியினரின் பள்ளி குழந்தைகள் கல்வி பாதிப்பு
author img

By

Published : Jun 23, 2021, 11:28 PM IST

மதுரை: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த எழில் ஓவியா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "நாடு முழுவதும் வசித்துவரும் பழங்குடியினர், வேலைக்கு செல்ல முடியாததால் சில தொண்டு நிறுவனங்கள் அவர்களுக்கு உதவி செய்துவருகின்றனர். தற்போது பழங்குடியின மாணவர்களுக்கு அளிக்கப்படும் சத்துணவு கிடைக்கப் பெறாததால், மிகவும் சிரமமான நிலையில் உள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் சுமார் 225 பழங்குடியினர் தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது கரோனா நோய்த் தொற்று காலம் என்பதால் அவை அனைத்தும் மூடப்பட்டதால், அங்கு படித்துவந்த மாணவர்கள் அனைவரும் தங்களது வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.

மேலும் பழங்குடியினரின் பள்ளி குழந்தைகள் படிப்பதற்கு அவர்கள் வசிக்கும் இடங்களில் போதிய வசதிகள் இல்லாததால், அவர்கள் கல்வி பயில்வது கேள்விக் குறியாக உள்ளது. மேலும் அவர்களில் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் அவர்களை தனிமைப்படுத்த போதிய வசதிகள் அப்பகுதியில் இல்லை.

எனவே பழங்குடியினர் மக்கள் வசிக்கும் இடங்களில் அவர்களுக்கு உணவு அளிக்க சமுதாய சமையலறை மற்றும் மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவாக ஆன்லைன் வகுப்பு நடத்த அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும் கரோனா தொற்று ஏற்பட்டால் அவர்களை தனிமைப்படுத்த வனப்பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களை கரோனா சிகிச்சை நிலையமாக அமைக்க அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசு சார்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்தியா முழுவதும் 52ஆயிரத்து 367 பழங்குடியின மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி கற்பதற்காக "ஏகலைவா" என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்தியா முழுவதும் 15,083 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். மீதமுள்ள மாணவர்கள் கல்வி கற்பதற்கான மாற்று ஏற்பாடுகள் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் அவர்களுக்கு தேவையான உணவு மருந்துகள் தொண்டு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வருவதாகவும், தமிழ்நாட்டில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் 6 பழங்குடியின பள்ளிகள் செயல்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில் பழங்குடியினர் பலர் வனப்பகுதியில் வசிப்பதால் அங்கு அவர்களுக்கு தேவையான இணைய வசதி செய்து தரவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வனப்பகுதிகளில் இணையதள வசதி ஏற்படுத்தினால் வனவிலங்குகள் கடத்தல் மற்றும் பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தமிழ்நாடு அரசு பழங்குடியினருக்கான சத்தான உணவு, கரோனா சிகிச்சை மையம் அமைப்பது மற்றும் பழங்குடியின மாணவர்கள் கல்வி கற்க வனப்பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள் பயன்படுத்தலாமா? என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.