ETV Bharat / city

'அண்ணாந்து பார்க்க வைத்த கல்யாணம்' - விமானத்திற்குள் டும்.. டும்.. சத்தம் - couple traveled in plane

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்வார்கள்... ஆனால் மதுரையைச் சேர்ந்த மணமக்கள் சொர்க்கத்துக்குக் கொஞ்சம் கீழே அந்தரத்தில் அதாவது விமானத்தில் திருமணத்தை நடத்தி அனைவரையும் அண்ணாந்து பார்க்க வைத்திருக்கிறார்கள்.

the couple who got married in airplane at  madurai

author img

By

Published : May 23, 2021, 6:12 PM IST

ஊரடங்கு காரணமாக மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த பல்வேறு திருமணங்கள் அவசர அவசரமாக இன்றையே தினமே நடத்தப்பட்டது. ஆங்காங்கே மண்டபங்களில் குறைந்த அளவு ஆட்கள் அனுமதியுடன் திருமணங்கள் நடந்து முடிந்தன.

'திருமணம் விமானத்தில் நிச்சயிக்கப்படுகிறது' - சிறப்பு தொகுப்பு

இந்நிலையில், மதுரையை சேர்ந்த மணமக்கள் மீனாட்சி ராகேஷ் - தீக்‌ஷனா, இருவரும் ஊரடங்கு காரணமாக பறக்கும் விமானத்தில் பயணித்தபடி திருமணம் செய்துள்ளனர். பெங்களூரிலிருந்து மதுரைக்கு வந்த விமானத்தில் வருகை தந்த ஜோடி தங்களது உறவினர்கள் முன்பாக சம்பிரதாயப்படி தாலி கட்டி திருமணம் செய்துகொண்டனர்.

மணமக்கள் மீனாட்சி ராகேஷ் - தீக்‌ஷனா
மணமக்கள் மீனாட்சி ராகேஷ் - தீக்‌ஷனா

இதையடுத்து இருவரும் பெற்றோர்கள், உறவினர்களிடம் ஆசி பெற்றுக் கொண்டனர். விமானப் பயணம் என்பதால் விமானம் ஒரு மணி நேரம் வாடகைக்கு எடுக்கப்பட்டு அனைவருக்குமே கரோனா பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் திருமண வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டாகிவருகிறது.

இதையும் படிங்க: முதலமைச்சர் பாராட்டிய ஆட்டோ ஓட்டுநர்கள் - மக்கள் சேவைக்கு கிடைத்த அங்கீகாரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.