மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூன்றாவது நினைவு தினத்தை முன்னிட்டு, ஆயிரம் நபர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, ‘தமிழ்நாட்டில் மாவட்டங்கள் 37 ஆக உயர்ந்திருக்கிறது. 6 மருத்துவக் கல்லூரிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி அரசு ஆணைகள் மூலம் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ஆகவே இனிவரும் தேர்தல்களில் அதிமுக எளிதாக வெற்றி பெறும்.
புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் தேவைக்கேற்ற அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளாட்சி வார்டுகள் முறையாக வரையறுக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சித் தேர்தல் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
உள்ளாட்சித் தேர்தலுக்காக பொங்கல் பரிசு வழங்கப்படவில்லை. உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டால் பொங்கல் பரிசு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுவிடும். ஆகவே முன்னரே பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது’ என்று கூறினார்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலை தடுக்க திமுக நினைக்கவில்லை - உதயநிதி ஸ்டாலின்