தமிழ்நாட்டிற்கு வந்த தென் மாவட்டங்களுக்கான ஆறாவது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிசா மாநிலம், ரூர்கேலாவிலிருந்து ஆறு டேங்கர் லாரிகளில் 89.2 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் இன்று (ஜூன்.06) மாலை மதுரை கூடல் நகர் வந்து சேர்ந்தது.
50ஆவது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்
இது தமிழ்நாட்டிற்கு வந்த 50ஆவது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் இதுவாகும். ஏற்கனவே மதுரை மாவட்டம், வாடிப்பட்டி, தூத்துக்குடி மீளவிட்டான் ஆகிய ரயில் நிலையங்களுக்கு தலா ஒரு ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் வந்துள்ளது.
3404.85 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன்
ரோல் ஆன்-ரோல் ஆப் (Roll On - Roll Off concept) திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட டேங்கர் லாரிகள் கூடல் நகர் ரயில் நிலையம் வந்தவுடன் சாலை வழியாக இயங்கி ஆக்ஸிஜன் தேவைப்பட்ட மருத்துவமனைகளுக்கு விரைவாக அனுப்பி வைக்கப்பட்டது. இதையும் சேர்த்து இதுவரை தமிழ்நாட்டிற்கு ரயில் மூலம் 3404.85 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் கொண்டுவரப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களுக்கு ரயில் மூலம் இதுவரை 435.19 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் வந்து சேர்ந்துள்ளது.