ETV Bharat / city

மதுரை மீனாட்சி கோயிலில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை - மதுரை மீனாட்சி கோயிலில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தேசிய பாதுகாப்புப் படையினர் சார்பாக தீவிரவாத தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தேசிய பாதுகாப்புப் படையினர் சார்பாக தீவிரவாத தடுப்பு ஒத்திகை

author img

By

Published : Aug 7, 2021, 2:55 PM IST

மதுரை: தேசிய பாதுகாப்புப் படையினர் மதுரையின் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் தீவிரவாத தடுப்பு ஒத்திகையை கடந்த சில நாள்களாக மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், அந்தந்த பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவது குறித்து உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் (ஆக. 05) மதுரை பாண்டி கோயில் சுற்றுச்சாலை அருகே ஹெலிகாப்டர் மூலம் தீவிரவாத தடுப்பு ஒத்திகை மேற்கொண்டனர்.

மதுரை மீனாட்சி கோயிலில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை

பாதுகாப்பு ஆலோசனைகள்

மதுரையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோயில், விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களை தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அலுவலர்கள் பார்வையிட்டு ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். அந்த குறிப்பிட்ட இடங்களில் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் அங்குள்ள உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

அப்போது, பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் தீவிரவாத தாக்குதல் நடைபெறும்போது மேற்கோள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், தீவிரவாதிகளின் தாக்குதல்களை எதிர்கொள்வது குறித்தும், பொதுமக்களை பாதுகாப்பது குறித்தும் ஒத்திகையை நிகழ்த்திக் காட்டினர்.

150-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் கலந்துகொண்ட இந்த ஒத்திகை நிகழ்ச்சியை, ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். தொடர்ந்து நேற்றிரவு 10 மணிமுதல் அதிகாலைவரை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீவிரவாத தாக்குதலின்போது, எதிர்கொள்ள என்னென்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து இக்குழுவினர், பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

இந்த ஒத்திகை இரவு 9.30 மணிமுதல் நள்ளிரவு 1.30 மணிவரை நடைபெற்றது. தொடர்ந்து நான்கு மணி நேரம் நடைபெற்ற ஒத்திகை வெற்றிகரமாக முடிவடைந்ததையடுத்து, தேசிய பாதுகாப்புப் படையினர் அம்மன் சன்னதியின் முன்பு நினைவு புகைப்படத்தை எடுத்துக்கொண்டு உற்சாகமாக புறப்பட்டனர்.

இதையும் படிங்க: 'கும்பமேளாவில் கரோனா சோதனை செய்த ஆய்வகங்களில் திடீர் ரெய்டு: வெளியான திடுக்கிடும் தகவல்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.