ETV Bharat / city

அதிமுக கவுன்சிலரை கடத்தி சென்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு முடித்து வைப்பு! - case registered against AIADMK councillor for abduction

திருச்சி மணப்பாறை நகராட்சி 1 ஆவது வார்டு கவுன்சிலர் (அதிமுக) செல்லம்மாளை, கடத்தி சென்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

அதிமுக கவுன்சிலரை கடத்தி சென்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு முடித்து வைப்பு

author img

By

Published : May 26, 2022, 10:48 AM IST

Updated : May 26, 2022, 11:03 AM IST

மதுரை: திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி, 1 ஆவது வார்டு கவுன்சிலர் செல்லம்மாள், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "நான் மணப்பாறை நகராட்சி தேர்தலில் 1ஆவது வார்டு கவுன்சிலர் ஆக அதிமுக சார்பில் போட்டியிட்டு மணப்பாறை நகராட்சி உறுப்பினராக உள்ளேன். இந்நிலையில் நகராட்சி தலைவராக எங்கள் கட்சியைச் சேர்ந்த சுதா பாஸ்கரன் தேர்வு செய்யப்பட்டார்.

அதன் தொடர்ச்சியாக அன்று மதியமே நடைபெற இருந்த துணைத் தலைவர் தேர்தல் எவ்வித காரணமுமின்றி நகராட்சி தேர்தல் ஆணையர் நகராட்சி துணைத் தலைவர் தேர்தலை ஒத்திவைத்தார். அதன்பிறகு துணைத் தலைவர் தேர்தல் இருமுறை ஒத்திவைக்கப்பட்டது. நடைபெற உள்ள நகர்மன்றத் துணைத் தலைவர் தேர்தலில் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்கக் கூடாது என்ற வகையில், தூண்டுதல் மற்றும் மிரட்டல் காரணமாக எனது மகனை வைத்து, காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதில் என்னை, சிலர் கடத்தி வைத்துளனர் என எனது மகன் மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் என்னை யாரும் கடத்தவும் இல்லை, ஜாதி ரீதியாக வன்கொடுமை எதுவும் செய்யவும் இல்லை. எனது மகன் மூலம் அவதூராக மணப்பாறை காவல் நிலையத்தில் பொய் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் என்னை அரசியல் ரீதியாக மிரட்டும், ஒரு தரப்பினர் இது போன்ற செயலில் ஈடுபட்டு உள்ளனர். துணை தலைவர் தேர்தல் நடக்க கூடாது, என்ற எண்ணத்தில் செயல்படுகின்றனர். எனது மகன் புகாரின் பேரில், பதிவு செய்யப்பட்டுள்ள FIR ஐ ரத்து செய்து, எனக்கும் அதிமுக கவுன்சிலர்களுக்கும் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறி உள்ளார்.

இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருச்சி மணப்பாறை நகராட்சி, 1 ஆவது வார்டு கவுன்சிலர் செல்லம்மாள், நீதிபதி முன் ஆஜராகி என்னை யாரும் கடத்த வில்லை என கூறினார். இதை தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் மணப்பாறை காவல் நிலையத்தில் ஆஜராகி, என்னை யாரும் கடத்த வில்லை எனக் கூறி, பதிவு செய்யப்பட்ட வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனத் தெரிவித்து இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ராமேஸ்வரம் ரயில் நிலையம் ரூ.120 கோடி செலவில் மறுசீரமைப்பு

Last Updated : May 26, 2022, 11:03 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.