ETV Bharat / city

மதுரை மீனாட்சி கோயில் சார்பாக ரூ.23 கோடியில் தங்கும் விடுதி - ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு - மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சார்பாக ரூபாய் 23 கோடி மதிப்பீட்டில் புதிய தங்கும் விடுதி கட்டுவதற்கான ஒப்பந்தப் புள்ளியை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

மதுரை மீனாட்சி
மதுரை மீனாட்சி
author img

By

Published : May 11, 2022, 10:09 PM IST

மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் தங்கும் வசதிக்காக கூடுதல் தங்கும் விடுதி கட்ட கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் 23 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பில் நான்கு அடுக்குகளைக் கொண்ட பிரம்மாண்ட தங்கும் விடுதி அமைக்க முடிவு முடிவு செய்து, அப்பகுதியில் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் 99 ஆயிரத்து 512 சதுர அடியில் பிரமாண்ட பயணிகள் விடுதி அமைய உள்ளது.

மூன்று படுக்கை முதல் 20 படுக்கைகள் வரை கொண்ட தனித்தனி அறைகள் பக்தர்கள் வசதிக்காக கட்டப்படும் எனவும் முக்கிய பிரமுகர்கள் தங்கும் அறை, கழிவறை, பார்க்கிங் உள்ளிட்ட கூடுதல் வசதிகள் செய்யப்படும் எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கட்டுமான பணியை 18 மாதங்களுக்குள் முடிக்க ஒப்பந்த நிறுவனங்களுக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: மதுரை ஜிகர்தண்டா.. 600 ஆண்டு கால வரலாறும், வாழ்வியலும்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.