மதுரை அரசு விரைவு போக்குவரத்து கழக கிளைமேலாளராக பணிபுரிந்த அபிமன்யு என்பவர் திருச்சிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இந்த பணியிடமாற்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், மதுரை தொழிற்சங்க உறுப்பினர்களின் தூண்டுதலால், இந்த பணியிடமாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதைக்கேட்ட நீதிபதி, மனுதாரர் சம்பந்தப்பட்ட தொழிற்சங்க உறுப்பினர் மீது சட்டப்படி புகார் அளித்துக்கொள்ளலாம். போக்குவரத்து கழகங்களின் அன்றாட நடவடிக்கையில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது. அதேபோல மனுதாரரும் பணியிடமாற்றத்தில் தலையிட கூடாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலாளருக்கு பிடிவாரண்ட்... உயர் நீதிமன்றம் உத்தரவு...