விளையாட்டுத் துறையில் சாதனை படைப்பவர்களுக்கு தேசிய விளையாட்டு தினத்தன்று குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்கி கவுரவிப்பார். அந்த வகையில், இந்தாண்டுக்கான விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதும், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர் மற்றும் பயிற்சியாளர் ரஞ்சித் குமாருக்கு தயான் சந்த் விருதும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தேசிய விளையாட்டு தினமான இன்று (ஆக.29) நடைபெற்ற விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா காணொலி மூலம் நடைபெற்றது. இந்த விழாவில் காணொலி காட்சியில் இருந்தபடியே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வீரர்களுக்கு வழங்கினார்.
பெங்களூருவிலிருந்து காணொலி வாயிலாக பங்கேற்ற மாரியப்பன் தங்கவேலுவிற்கு ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதையும், ரஞ்சித் குமாருக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான தயான் சந்த் விருதையும் குடியரசுத் தலைவர் வழங்கி கவுரவித்தார்.
இதையும் படிங்க:தேசிய விளையாட்டு விருதுகளுக்கான பரிசுத் தொகை உயர்வு:கிரண் ரிஜுஜூ