ETV Bharat / city

அம்பேத்கர் தொகுப்புகள்: சு. வெங்கடேசன் எம்பி அமைச்சரிடம் கோரிக்கை - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

அம்பேத்கர் குறித்த தொகுப்புகள் வெளிவர நடவடிக்கை வேண்டுமென சு. வெங்கடேசன் எம்பி அமைச்சரிடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.

சு. வெங்கடேசன் எம்பி அமைச்சரிடம் கோரிக்கை

author img

By

Published : Dec 25, 2021, 6:34 AM IST

மதுரை: சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ”மத்திய அரசின் சமூகநீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமாரை நேரில் சந்தித்து வழங்கிய கடித விவரம் வருமாறு,

அம்பேத்கரின் எழுத்துகள், உரைகளின் தொகுப்புகள் எண் 1 முதல் 37 வரை, புதிய தொகுப்பு எண் 38, இன்னும் நிலுவையாய் உள்ள தொகுப்பு எண்கள் 39, 40 ஆகியன வெளிவருவதில் உள்ள தடைகளை அகற்ற வேண்டுமென்று கோரியிருக்கிறேன்.

சு. வெங்கடேசன் எம்பி அமைச்சரிடம் கோரிக்கை
சு. வெங்கடேசன் எம்பி அமைச்சரிடம் கோரிக்கை

உரிமம் பெற்ற பதிப்பகம்

பல மொழிகளில் இத்தொகுப்புகளை வெளிக் கொண்டுவர முன் முயற்சி எடுக்கப்பட்டபோது, தமிழுக்கான முழுமையான வணிக உரிமையை 70 ஆண்டு பாரம்பரியமும், நன்மதிப்பும் உடைய நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பெற்றது.

1 முதல் 25 வரை உள்ள தொகுப்புகளை வெளிக்கொண்டுவருவதில் டாக்டர் எஸ். பெருமாள் தலைமையிலான குழு இயங்கியது. பின்னர் சிறந்த எழுத்தாளரான ரெங்கசாமி (மாஜினி) குழுவிற்குத் தலைமையேற்று தொகுப்பு எண் 37 வரை வெளிக்கொண்டுவந்தது.

முதல் தொகுப்பானது 1991ஆம் ஆண்டில் மொழிபெயர்ப்பு பணி தொடங்கப்பட்டு, 1993ஆம் ஆண்டில் வெளிக் கொணரப்பட்டது. எல்லாத் தொகுப்புகளும் 1993 - 2005 காலகட்டத்தில் வெளிவந்தன.

அச்சிடப்படாத தொகுப்புகள்

சில தொகுப்புகள் 2008, 2010ஆம் ஆண்டில், அதற்கு இருந்த தேவையின் அடிப்படையில் வெளிவந்தன. அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்திற்காக சில தொகுப்புகள் அளிக்கப்பட்டன. 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் எந்தத் தொகுப்பும் அச்சிடப்படவில்லை.

தற்போது அம்பேத்கர் தொகுப்புகளை வாசிப்பதற்கான தேடல் அதிகரித்துள்ளது. பல அமைப்புகள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், கல்வியாளர்கள், இளைஞர்கள் ஆகியோரிடமிருந்து முழுத் தொகுப்புகளுக்கு வேண்டுகோள்கள்வருகின்றன.

ஆனால் மொத்தத் தொகுப்புகள் இன்று இருப்பில் இல்லை. நான் பதிப்பகத்தாரிடம் விசாரித்ததில் 2011ஆம் ஆண்டிலிருந்து மறு பதிப்புக்கான வேண்டுகோள் பலமுறை டாக்டர் அம்பேத்கர் பவுண்டேசனுக்கு அனுப்பப்பட்டும் பதில் வரவில்லை என அறிகிறேன்.

தேவையைப் பூர்த்திசெய்ய இயலாத நிலை

2018ஆம் ஆண்டில், புதுச்சேரி அரசின் ஆதி திராவிட நலத் துறை, பாரத ரத்னா பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் விழாக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர் எம். காந்தி பிரகாஷ் 600 முழுத் தொகுப்புகளுக்கு (1 - 37) ஆர்டர்களைத் தந்தும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் கைவசம் இருப்பு இல்லாததால் தர முடியவில்லை.

தற்போது பல மாவட்டங்களில் புத்தகத் திருவிழாக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அம்பேத்கர் எழுத்துகள் இளைய தலைமுறைக்கு கல்வியையும், விழிப்பையும் தரக்கூடியவை ஆகும். ஆகவே, இந்தத் தடைகள் அகற்றப்பட்டு அம்பேத்கர் எழுத்துகள் தாமதமின்றி வெளிவர வேண்டும்.

தாங்கள் உடனடியாகத் தலையிட்டு, அம்பேத்கர் பவுண்டேசனுக்கு அறிவுறுத்தி, தாமதமின்றி முழுத் தொகுப்புகள் கிடைப்பதற்கு அனுமதியும், ஆதரவும் அளிப்பதை உறுதிசெய்யுமாறு வேண்டுகிறேன்.

நம்பிக்கையளிக்கும் பதில்

இக்கடிதத்தை அமைச்சரிடம் நேரில் வழங்கியபோது ’இப்பிரச்சினை குறித்து உரிய முறையில் தலையிட்டு தீர்வு காணுகிறேன்’ என்றார். அமைச்சரின் பதில் நம்பிக்கையளிப்பதாக இருந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: Omicron scare: 'ஒமைக்ரான் தொற்றுப் பரவல் அதிகரிக்க வாய்ப்பு - மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிருங்கள்' - ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.