மதுரை: சாலையில் வாகனம் மோதி உயிரிழந்த புள்ளி மானை வனத்துறையினர் வனப்பகுதியில் அடக்கம் செய்தனர்.
திருமங்கலம் விருதுநகர் நான்கு வழிச்சாலையில் சிவரக்கோட்டை கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட மான்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மான்கள் அடிக்கடி இறை தேடி நான்கு வழிச் சாலையை கடந்து செல்வது வழக்கம்.
அதுபோல் இன்று(டிச.19) நண்பகலில் இறை தேடி மூன்று வயது பெண் புள்ளிமான் ஒன்று வந்த போது சிவரக்கோட்டை பகுதி நாய்கள் அதை துரத்தியுள்ளது. தப்பியோடி நான்கு வழிச் சாலையை கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக திருமங்கலத்திலிருந்து விருதுநகர் நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் பெண் புள்ளி மான் மீது மோதியதில் மான் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
மான் இறந்ததைக் கண்ட கிராமத்தினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர், மானை மீட்டு உடற்கூறாய்வு செய்து வன பகுதியில் அடக்கம் செய்தனர். தொடர்ந்து இப்பகுதியில் இரை தேடிச் செல்லும்போது மான்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பதும், நாய்களால் தாக்கப்பட்டு உயிரிழப்பதும் தொடர்கதையாக உள்ளது. எனவே வனத்துறையினர் இப்பகுதியில் வனச் சரணாலயம் அமைத்து மான்களை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: வடமாவட்டத்தில் திடீரென முளைத்த சுவர் விளம்பரம்: அஞ்சா நெஞ்சர் அண்ணன் மு.க.அழகிரி