மதுரை: சிறப்பு ரயில் சேவை குறித்து தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், “நாகர்கோவில் - பெங்களூரு இடையே மதுரை வழியாக மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட இருக்கிறது. வண்டி எண் 07235 பெங்களூரு - நாகர்கோவில் சிறப்பு ரயில் 31.01.2021 முதல் பெங்களூரிலிருந்து மாலை 5 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 03.00 மணிக்கு மதுரையில் நிறுத்தப்பட்டுத் தொடர்ந்து காலை 08.20 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.
மறுமார்கத்தில் வண்டி எண் 07236 நாகர்கோவில் - பெங்களூர் சிறப்பு ரயில் 01.02.2021 முதல் நாகர்கோவிலிலிருந்து இரவு 07.10 மணிக்குப் புறப்பட்டு, மதுரை வழியாக மறுநாள் காலை 09.20 மணிக்குப் பெங்களூரு சென்று சேரும்.
இந்த ரயில்கள் பெங்களூரு கண்டோன்மெண்ட், ஓசூர், தர்மபுரி, சேலம், ராசிபுரம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த தினசரி சேவை ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு அவசியம். இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்குகிறது” என்று கூறப்பட்டுள்ளது.