கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோயில்களுக்குச் சென்று வழிபட்டு வரும் சசிகலா நேற்று (மார்ச்.29) மாலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வழிபாடு செய்தார்.
அவரது திடீர் மதுரை வருகையால் கோயில் வளாகத்தில் பரபரப்பு நிலவியது. இந்த தகவலறிந்து கோயில் முன்பு அமமுக வேட்பாளர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் குவிந்து சசிகலாவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து அங்கிருந்து பறப்பட்ட சசிகலா அழகர் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.