ETV Bharat / city

பெண் காவலர்கள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.!

மதுரை: காவல் துறை சார்பில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில்1000க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் தலைக்கவசம் அணிந்து பங்கேற்றனர்.

Road safety awareness rally: Over 1000 female guards participating with helmets
1000க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் தலைக்கவசம் அணிந்து பேரணியில் பங்கேற்பு.
author img

By

Published : Jan 20, 2020, 8:31 PM IST

31ஆவது சாலை பாதுகாப்பு வார விழா தமிழ்நாடு முழுவதும் கடைப்பிடிக்கும் நிலையில், மதுரையில் காவல் துறை சார்பில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள், போக்குவரத்து பெண் காவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

மதுரை தமுக்கம் மைதானத்திலிருந்து நெல்பேட்டை அண்ணா சிலை வழியாக செயின்ட் ஜோசப் பள்ளி வழியாக கீழவாசல், தெற்கு வாசல், மதுரை திடீர் நகர் வழியாக பழங்காநத்தம் ஜெயம் திரையரங்கம் அருகில் நிறைவடைந்தது.

பேரணியில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளோடு பெண் காவலர்கள் இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணியை மேற்கொண்டனர்.

சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் வினய் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த நிகழ்வில் காவல் துறை ஆணையர் டேவிட்சன் தேவாசிர்வாதம், சட்டம் ஒழுங்கு துணை காவல் ஆணையர் கார்த்திக், போக்குவரத்து துணைக்காவல் ஆணையர் சுகுமாரன் மற்றும் பல அலுவலர்கள் பங்கேற்றனர்.

1000க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் தலைக்கவசம் அணிந்து பேரணியில் பங்கேற்பு.

அதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த காவல் துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பேசுகையில்,

’மதுரை மாநகரில் பைக் ரேசில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்படும். அதிரடிப்படையினர் ரோந்து பணியில் தீவிரமாக செயல்படுவர். வேகமாக வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது கடுமையான வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஷேர் ஆட்டோக்களை கண்ட இடங்களில் நிறுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதிக நபர்கள் மற்றும் பாரங்களை ஏற்றும் நபர்கள் மீது வழக்குப் பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

இதையும் படியுங்க:

ஈரோட்டில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி!

Intro:பைக் ரேஸில் ஈடுபட்டால் வழக்கு பாயும் - போலீஸ் கமிஷனர் டேவிட்சன் எச்சரிக்கை

12-க்கு நகருக்குள் பைக் ரேசில் ஈடுபட்டால் கடுமையான வழக்குகள் அவர்கள் மீது பதிவு செய்யப்படும் என்று மதுரை மாநகர காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் எச்சரிக்கை.
Body:பைக் ரேஸில் ஈடுபட்டால் வழக்கு பாயும் - போலீஸ் கமிஷனர் டேவிட்சன் எச்சரிக்கை

12-க்கு நகருக்குள் பைக் ரேசில் ஈடுபட்டால் கடுமையான வழக்குகள் அவர்கள் மீது பதிவு செய்யப்படும் என்று மதுரை மாநகர காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் எச்சரிக்கை.

மதுரை காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி- 1000க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் தலைக்கவசம் அணிந்து பேரணியில் பங்கேற்பு

31 வது சாலை பாதுகாப்பு வார விழா தமிழகம் முழுவதும் கடைப்பிடிக்கும் நிலையில், மதுரையில் காவல்துறை சார்பில் சுமார் 1000க்கும் மேற்பட்ட  பெண் காவலர்கள் போக்குவரத்து பெண் காவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் தலைக்கவசம் அணிந்து தொடங்கும் விழிப்புணர்வு பேரணி மதுரை தமுக்கம் மைதானத்தில் இருந்து நெல்பேட்டை அண்ணாசிலை வழியாக செயிண்ட் ஜோசப் பள்ளி வழியாக கீழவாசல், தெற்குவாசல், மதுரை திடீர் நகர் வழியாக பழங்காநத்தம் ஜெயம் திரையரங்கம் அருகில் நிறைவடைந்தது.

பேரணியில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளோடு பெண் காவலர்கள் இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணியை மேற்கொண்டனர்.

சாலைபாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் வினய் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், சட்டம் ஒழுங்கு துணை காவல் ஆணையர் கார்த்திக், போக்குவரத்து துணைக்காவல் ஆணையர் சுகுமாரன் மற்றும் பல அதிகாரிகள் பங்கேற்றனர்.

அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பேசுகையில்,

மதுரை மாநகரில் பைக் ரேசில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்படும். அதிரடிப்படையினர் ரோந்து பணியில் தீவிரமாக செயல்படுவர்.

பைக் ரேசில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

ஷேர் ஆட்டோக்களை கண்ட இடங்களில் நிறுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதிக நபர்கள் மற்றும் பாரங்களை ஏற்றும் நபர்கள் மீது வழக்குப்பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.