சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று கடந்தாண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கலானது. இந்த மனுக்களை 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாற்றி உத்தரவிட்டார்.
எனினும் அவர் உச்ச நீதிமன்றத்தின் கடந்தாண்டு தீர்ப்புக்கு தடைவிதிக்கவில்லை. இந்த நிலையில் மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஐயப்பன் மலை சம்பந்தமாக இன்றைய தினம் உச்ச நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் வழங்கிய தீர்ப்பு தொடர்ந்து இருக்கும் என்றும் இது குறித்த தீர்ப்பை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு இனி வழங்கும் என்றும் இந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாட்டிலிலுள்ள அனைவருக்கும் மதுரை ஆதீனத்தின் வேண்டுகோள், இந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க : மதுரை ஆதீனத்திற்கு டிடிவி எச்சரிக்கை!