ETV Bharat / city

காந்தி அருங்காட்சியகம் சீரமைப்பு: ரூ.2.12 கோடிக்கு ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு - Gandhi Museum

மதுரையில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சியகம் தமிழ்நாடு அரசால் புதுப்பொலிவு பெறுவதை ஒட்டி ரூ.2.12 கோடிக்கு ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது.

காந்தி அருங்காட்சியக சீரமைப்பு: ரூ.2.12 கோடிக்கு ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு

author img

By

Published : May 27, 2022, 10:38 PM IST

மதுரை: தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவாக இந்தியாவிலேயே முதன் முதலில் அமைக்கப்பட்ட நினைவு அருங்காட்சியகமும், தென்னிந்தியாவின் குறிப்பிடத்தக்க அருங்காட்சியகங்களுள் ஒன்றாகத் திகழ்வதும் ஆன மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் ரூ.6 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்திருந்தார்.

400 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாளின் கோடைக்கால அரண்மனையாகத் இருந்த இந்த கட்டடத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. காந்தி அருங்காட்சியக வளாகத்தில் கழிவறை, லிப்ட், பளிங்கு கற்கள், வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு முதல் கட்டமாக 3 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

மதுரை காந்தி அருங்காட்சியகம்

அதனை தொடர்ந்து மதுரை மாவட்ட பொதுப்பணித்துறை பொறியாளர் தலைமையிலான குழுவினர் காந்தி நினைவு அருங்காட்சியகத்தை புனரமைக்க கடந்த மாதம் திட்ட வரைவு அறிக்கை தயாரித்து தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் தற்போது 2 கோடியே 12 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 12 மாதங்களுக்குள் புனரமைக்க ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கபட்டுள்ளது. இதற்கு வருகின்ற மே 30ஆம் தேதி முதல் ஜூன் 9ஆம் தேதி வரை விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என பொதுப்பணித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரேஷன் அரிசி கடத்தலுக்கு திமுக முக்கிய புள்ளிகள் உடந்தை - செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.