ETV Bharat / city

சுந்தரவல்லியம்மனை வரவேற்ற பள்ளிவாசல் - மத நல்லிணக்கத் திருவிழா! - சுந்தரவல்லியம்மனை வரவேற்ற பள்ளிவாசல் ஜமாத்

மதுரை: தேனூர் கிராமத்தில் நடைபெற்ற சுந்தரவல்லியம்மன் வீதி உலாவின்போது, அவ்வூரிலுள்ள பள்ளிவாசல் ஜமாத் பிரதிநிதிகள் வரவேற்று அம்மனுக்கு மாலை அணிவித்து மகிழ்ந்தனர்.

மத நல்லிணக்கத் திருவிழா
author img

By

Published : Oct 10, 2019, 11:41 AM IST

மதுரை மாவட்டம் தேனூர் கிராமத்தில் உள்ள சுந்தரவல்லியம்மன் கோயில் திருவிழா நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளான இன்று அம்மன் வீதிஉலா நடைபெற்றது. அப்போது தேனூர் பள்ளிவாசல் தெருவில் அமைந்துள்ள தர்காவின் ஜமாத் பிரதிநிதிகள், பக்தர்களுக்குக் குளிர்பானம் வழங்கினர்.

பள்ளிவாசல் அருகே அம்மன் திருவுலா வந்தபோது, ஜமாத் சார்பில் அம்மனுக்கு மாலை அணிவித்தனர். பதிலுக்குக் கோவில் நிர்வாகிகள், ஜமாத் பிரதிநிதிகளுக்கு மாலை அணிவித்தும், துண்டுகள் போர்த்தியும் மரியாதை செலுத்தினர். இதுகுறித்து ஜமாத் நிர்வாகி ரியாஸ் கூறுகையில், 'தேனூரில் தொன்றுத்தொட்டு நடைபெறும் சுந்தரவல்லி அம்மன் கோயில் திருவிழாவில், ஜமாத் சார்பாக வரி கட்டப்படுகிறது. மேலும், இரண்டு தரப்பிலும் மிக உரிமையோடு இந்தத் திருவிழாவையும், ஜமாத் சார்பாக நடைபெறும் திருவிழாவிலும் ஒருவருக்கொருவர் சகோதர பாசத்துடன், மத நல்லிணக்கத்தோடு பங்கேற்கிறோம்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் பக்தர்களுக்குக் குளிர்பானம் வழங்குவதை ஒவ்வொரு ஆண்டும் சிறப்புடன் செய்து வருகிறோம். முன்னோர்கள் மட்டுமன்றி, தற்போதுள்ள தலைமுறையினரும் இந்த விழாவைப் பாகுபாடின்றி சீரும் சிறப்புமாக மேற்கொண்டு வருகிறோம். மத பாகுபாடின்றி அம்மனிடம் வேண்டிக்கொண்டு கொலுசு, தங்க நகைகளை நேர்த்திக்கடனாக இஸ்லாமியப் பெண்கள் காணிக்கை செலுத்துவது தற்போது வரை வழக்கத்தில் உள்ளது' என்றார்.

தேனூர் சுந்தரவல்லியம்மனை வரவேற்ற பள்ளிவாசல் ஜமாத்

உள்ளூரைச் சேர்ந்த பிரமுகர் முத்து நாயகம் பேசுகையில், 'இங்குச் சாதி, மத பாகுபாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை. சுந்தரவல்லியம்மன் கோயில் திருவிழாவை மத நல்லிணக்க விழாவாகவே கொண்டாடி மகிழ்கிறோம். எங்கள் ஊரிலுள்ள அனைத்து இஸ்லாமிய மக்களும், கோயில் விழாவிற்கு வரி கொடுப்பதை வழக்கமாகவே கொண்டிருக்கிறார்கள். பிற கிராமங்களுக்கு தேனூர் முன்மாதிரியாகத் திகழ்வது எங்களுக்குப் பெருமை' என்றார்.

Intro:தேனூர் சுந்தரவல்லியம்மனை வரவேற்ற பள்ளிவாசல் ஜமாத் - நல்லிணக்கத் திருவிழா

தேனூர் கிராமத்தில் நடைபெற்ற சுந்தரவல்லியம்மன் வீதியுலாவின்போது அவ்வூரிலுள்ள பள்ளிவாசல் ஜமாத் பிரதிநிதிகள் வரவேற்று அம்மனுக்கு மாலை அணிவித்து மகிழ்ந்தனர். மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாய்த் திகழ்ந்த கோவில் திருவிழா.
Body:தேனூர் சுந்தரவல்லியம்மனை வரவேற்ற பள்ளிவாசல் ஜமாத் - நல்லிணக்கத் திருவிழா

தேனூர் கிராமத்தில் நடைபெற்ற சுந்தரவல்லியம்மன் வீதியுலாவின்போது அவ்வூரிலுள்ள பள்ளிவாசல் ஜமாத் பிரதிநிதிகள் வரவேற்று அம்மனுக்கு மாலை அணிவித்து மகிழ்ந்தனர். மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாய்த் திகழ்ந்த கோவில் திருவிழா.

மதுரை மாவட்டம் தேனூர் கிராமத்தில் உள்ள சுந்தரவல்லியம்மன் கோவில் திருவிழா நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளான இன்று அம்மன் வீதியுலா நடைபெற்றது. அப்போது தேனூர் பள்ளிவாசல் தெருவில் அமைந்துள்ள தர்காவின் ஜமாத் பிரதிநிதிகள், பக்தர்களுக்கு குளிர்பானம் வழங்கினர்.

பள்ளிவாசல் அருகே அம்மன் திருவுலா வந்தபோது, ஜமாத் பிரதிநிதிகள் அம்மனுக்கு மாலை அணிவித்தனர். பதிலுக்கு கோவில் நிர்வாகிகள், ஜமாத் பிரதிநிதிகளுக்கு மாலை அணிவித்தும், துண்டுகள் போர்த்தியும் மரியாதை செலுத்தினர்.

இதுகுறித்து ஜமாத் நிர்வாகி ரியாஸ் கூறுகையில், 'தேனூரில் தொன்று தொட்டு நடைபெறும் சுந்தரவல்லி அம்மன் கோவில் திருவிழாவில் ஜமாத் சார்பாக வரி கட்டப்படுகிறது. மேலும் இரண்டு தரப்பிலும் மிக உரிமையோடு இந்தத் திருவிழாவையும், ஜமாத் சார்பாக நடைபெறும் திருவிழாவிலும் ஒருவருக்கொருவர் சகோதர பாசத்துடன் நல்லிணக்கத்தோடு பங்கேற்கிறோம்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் பக்தர்களுக்கு குளிர்பானம் வழங்குவதை ஒவ்வொரு ஆண்டும் சிறப்புடன் செய்து வருகிறோம். முன்னோர்கள் மட்டுமன்றி, தற்போதுள்ள தலைமுறையினரும் இந்த விழாவை பாகுபாடின்றி சீரும் சிறப்புமாக மேற்கொண்டு வருகிறோம். பாகுபாடின்றி அம்மனிடம் வேண்டிக்கொண்டு கொலுசு, தங்க நகைகளை நேர்த்திக்கடனாக இஸ்லாமியப் பெண்களும் செய்வது தற்போது வரை வழக்கமாக உள்ளது' என்றார்.

உள்ளூரைச் சேர்ந்த பிரமுகர் முத்துநாயகம் பேசுகையில், 'இங்கு சாதி, மத பாகுபாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை. சுந்தரவல்லியம்மன் கோவில் திருவிழாவை மத நல்லிணக்க விழாவாகவே கொண்டாடி மகிழ்கிறோம். எங்கள் ஊரிலுள்ள அனைத்து முஸ்லீம் மக்களும் கோவில் விழாவிற்கு வரி கொடுப்பதை வழக்கமாகவே கொண்டிருக்கிறார்கள். பிற கிராமங்களுக்கு தேனூர் முன்மாதிரியாகத் திகழ்வது எங்களுக்குப் பெருமை' என்றார்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.