ETV Bharat / city

டிடிவி தினகரனோடு ரகசிய உறவாடும் ஓபிஎஸ்.. ஸ்டாலினை சந்தித்த ரவீந்திரநாத் - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு - TTV Dinakaran

'அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு பச்சைக்கொடி காட்டாதவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். சின்னம்மாவிற்கு எதிராக தர்ம யுத்தம் நடத்தி அதிமுகவில் பிரச்னைக்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஓ.பன்னீர்செல்வம். நடிகர் நம்பியார் நிஜத்தில் நல்லவர்; ஆனால், ஓ.பன்னீர்செல்வம் நிஜத்தில் வில்லன்' என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
author img

By

Published : Jun 26, 2022, 3:28 PM IST

மதுரை ஒற்றைத் தலைமை விவகாரம் அதிமுகவில் பூதாகரமாகி உள்ளநிலையில் ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவின் இரு தரப்புக்கும் இடையே, அக்கட்சியின் மூத்தத் தலைவர்கள் நடத்திய சமரச பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன. இந்நிலையில், தனது அலுவலகத்தில் இன்று (ஜூன்26) செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், 'அதிமுகவின் நிரந்தர எதிரியான திமுகவை எதிர்க்க ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி இருந்தால்தான், அதைச் செய்ய முடியும்; திமுக எதிர்ப்பு என்பது அதிமுகவினரின் இரத்தத்தில் ஊறியது.

பராசக்தி வசனத்தை வைத்து தூங்கும் ஓபிஎஸ்: அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை வழிநடத்த வேண்டிய ஓ.பன்னீர்செல்வம் பராசக்தி வசனத்தை தலைமாட்டில் வைத்து தூங்குவேன் என யார் மனதையோ குளிர்விக்கும் வகையில் பேசுகிறார். ரவீந்திரநாத் குமார் எம்.பி., திமுக முதலமைச்சரை சந்தித்து இந்த அரசு சிறப்பாக செயல்படுகிறது எனப் பேசி வந்துள்ளார். இது அதிமுகவை சோர்வடைய செய்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். சசிகலாவை சேர்க்கக்கூடாது. ஜெயலலிதா இல்லத்தை அரசுடைமையாக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் விடுத்த கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி செய்தார்.

டிடிவி தினகரனோடு என்ன ரகசிய உறவு? பிறகு எதற்கு டிடிவி தினகரனோடு ஓ.பன்னீர்செல்வம் ரகசிய உறவாடுகிறார்; பேசுகிறார். சந்தேகமற்ற அப்பழுக்கற்ற தலைமையாக இருக்கவேண்டும். உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். சந்தேகத் தலைமை வேண்டாம். நம்பிக்கைக்குரிய தலைமையே வேண்டும்; தொண்டர்களை அவர் கைவிட்டு விட்டார்.

கட்சி நலனில் அக்கறையற்றவர்: தொண்டர்கள் என்ற புனிதச்சுமையை சுமப்பதற்கு ஓ.பன்னீர்செல்வம் தயாராக இல்லை. தனது குடும்பத்தின் நலன்மீது மட்டுமே அவர் அக்கறை காட்டினார். அவர் கட்சி நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை கொடுத்து இருப்பார். பலமுறை பேச்சுவார்த்தைக்கு மூத்த தலைவர்கள் முயன்று இருக்கிறோம்.

அதிமுக வரலாற்றிலேயே கிடையாது: ஆனால், ஓ.பன்னீர்செல்வம் அதற்கு ஒத்துழைக்கவில்லை. நம்பியார் திரைப்படங்களில் வில்லனாக நடித்தார்; ஆனால் உண்மையில் நல்லவர். ஓ.பன்னீர்செல்வம் நல்லவராக இருந்தாலும் தொண்டர்களை நலனில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. காவல் துறைக்கு சென்று பொதுக்குழுவை நிறுத்த வேண்டும் என்று ஒரு தலைவர் கூறியது அதிமுக வரலாற்றிலேயே கிடையாது. தொண்டர்களின் மனக்குமுறல் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

நல்ல தலைமை தேடி வரும்: ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு அனைவரையும் அழைக்கின்றனர். நல்ல தலைமை என்றால் தேடி வரவேண்டும்; எதற்கு அழைக்கவேண்டும். அப்படி வருபவர்கள் எதற்காக வருவார்கள் எனத் தெரியும். வழிகாட்டுதல் குழுவில் ஓ.பன்னீர்செல்வம் தன்னுடன் இருப்பவர்களுக்கு மட்டுமே பதவி வாங்கிக் கொடுத்தார். ஆனால், உண்மையாக உழைப்பவர்களுக்கு கொடுக்கவில்லை.

ஓபிஎஸ் மன உறுதியில்லாதவர்: ஓ.பன்னீர்செல்வத்திற்கு மன உறுதி என்பதே இல்லை. அதனால், மன உறுதியோடு இருக்கும் எடப்பாடி பழனிசாமி தான் தலைமைக்கு சரியான நபர். தொண்டர்களின் கௌரவத்தை மீட்டெடுப்பார். தலைமை என்றால் உறுதியோடு அப்பழுக்கற்றத் தலைமையாக இருக்க வேண்டும். அது எடப்பாடி பழனிசாமி தான்.

எடப்பாடி பழனிசாமி என்கிற ஒற்றைத் தலைமைக்கு பச்சைக்கொடி காட்டாதவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். அதிமுகவை எதிர்த்த எஸ்டிஎஸ், திருநாவுக்கரசர் போன்று ஓ.பன்னீர்செல்வமும் உருவாவார். தென்மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் இடத்தைப் பிடிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி என இருவரும் காட்டுகின்ற வழியில் தற்போதும் நான் பயணிக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'அதிமுகவின் பொதுக்குழு சர்ச்சை முதல் திமுகவின் வாரிசு அரசியல் வரை...' - சி.வி. சண்முகம் அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.