ETV Bharat / city

பாலாறு ஆக்கிரமிப்பு வழக்கு; ஆட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பாலாற்றிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை, பாலாறு ஆக்கிரமிப்பு வழக்கு
ஆட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
author img

By

Published : Jun 16, 2021, 5:19 PM IST

மதுரை: புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த யூனுஸ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் விவசாயம் சார்ந்த மாவட்டமாகும்.

ஆவுடையார்கோயில் தாலுகா, பொய்யாதநல்லூர் கிராம மக்கள் பாலாற்றின் வரும் தண்ணீரை வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். சிலர் பாலாற்றில் ஆக்கிரமிப்பு செய்து மணலை கொட்டி மேடாக்கி உள்ளனர்.

பாலாற்றில் வீட்டு மனைகள்

இதனால், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் நீர் முழுவதும் ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்கள் பெருமளவு சேதம் அடையும். மேலும், பொய்யாதநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சிலர் பாலாற்றில் ஆக்கிரமிப்பு செய்து, வீட்டு மனைகளாக மாற்றி வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், பொதுமக்கள் பெரும் பாதிப்பிள்ளாகி உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி உயர் அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொய்யாதநல்லூர் கிராமத்தில், பாலாற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் அலுவலர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

நீதிபதிகளின் கேள்வி

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வில் இன்று (ஜூன் 16) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பாலாற்றில் இவ்வளவு ஆக்கிரமிப்புகள் எவ்வாறு நடைபெற்றது எனக் கேள்வி எழுப்பினர். இவ்வழக்குக் குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: விசாரணை கைதிகளுக்கு பிணை, பரோல் கோரி வழக்கு இரண்டாம் அமர்விற்கு மாற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.