மதுரை: தமிழ்நாட்டில் புதிய 11 மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையைத் திறந்துவைக்க நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி 2022 ஜனவரி 12 அன்று விருதுநகர் வருகைதருகிறார். அவருக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கவுள்ளனர்.
இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக டெல்லியிலிருந்து புறப்படும் நரேந்திர மோடி மதுரை விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து சாலை வழியாக விருதுநகர் செல்கிறார். இதற்காக காவல் துறையின் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது.
இந்த நிலையில், பாஜக சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், மதுரையில் ஜனவரி 12ஆம் தேதி கட்சியின் சார்பில் நடைபெறும் பொங்கல் விழாவில் நரேந்திர மோடி பங்கேற்கிறார். 'மோடி பொங்கல்' என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பை கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.
இதையும் படிங்க: 'ஜிஎஸ்டியில் டி.ஆர். பாலு, பிடிஆர் எதிரெதிர் நிலைப்பாடு; தெளிவுபடுத்துங்க ஸ்டாலின்!'