மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். மேலும், திமுக, அமமுக வேட்பாளர்களும் களத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் இத்தொகுதிக்குட்பட்ட கட்ராம்பட்டியில், இன்று வாக்களிக்க வந்த பெண்களிடம் இரட்டை இலைக்கு வாக்குக் கேட்டதாக வாக்குச்சாவடி அலுவலர் சௌந்தர்யா மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதன் காரணமாக திமுக, அமமுக வேட்பாளர்கள் அலுவலர் சௌந்தர்யாவிடம் வாக்குவாதம் செய்தனர். இதனையடுத்து தேர்தல் ஆணையம் அவரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. ஆளுங்கட்சியான அதிமுகவுக்கு ஆதரவாக வாக்குச்சாவடி அலுவலரே வாக்கு கேட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: வாக்காளர் மீது பாமக நிர்வாகி தாக்குதல்: வீரபாண்டியில் பரப்பு!