ETV Bharat / city

"எங்களை கருணை கொலை செய்யுங்கள்" - மனவளர்ச்சி குன்றிய சிறுமியுடன் தாய் கதறல்! - மகளை கருணை கொலை செய்ய தாய் மனு

மதுரை: மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பராமரிக்க முடியாமல் தவிக்கும் தாய், தங்களை கருணை கொலை செய்யுமாறு மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்துள்ளார்.

petition-for-mercy-killing-un-maintainable-mentally-retarded-girl-in-madurai

author img

By

Published : Jan 12, 2021, 6:11 PM IST

மதுரை மேலமடை எம்.ஜி.ஆர் தெருவில் மாரிஸ்வரி-கணேசன் தம்பதி வசித்துவருகின்றனர். அவர்களின் முதல் குழந்தையான கீர்த்தனா மனவளர்ச்சி குன்றியவர். அந்தச் சிறுமியை 14 ஆண்டுகளாக வளர்த்துள்ளனர்.

இதற்கிடையில் போதிய வருமானம் இல்லாத காரணத்தால், பலமுறை சிறுமியை மனவளர்ச்சி குன்றியோர் காப்பகத்தில் அனுமதிக்க முயற்சித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துவந்துள்ளனர். அப்படி 10 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் பயனில்லை.

அதைத்தொடர்ந்து தற்போது மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் புதூர் பகுதியில் உள்ள காப்பகத்திற்கு பரிந்துரை கடிதம் அளிக்கப்பட்டது. அந்தக் கடிதத்துடன் மாரிஸ்வரி, தனது மகளுடன் காப்பகத்திற்கு சென்றபோது மனவளர்ச்சி குன்றிய குழந்தை தனக்கான பணிகளை தானே செய்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என காப்பக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனால், மாரிஸ்வரி கண்ணீருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் அரசு எங்களை கண்டுகொள்ளவில்லை எனவே தன்னையும் தனது மனவளர்ச்சி குன்றிய குழந்தையையும் கருணைக் கொலை செய்ய கோரிக்கை மனு அளித்துள்ளார்.

இதுகுறித்து மாரிஸ்வரி கூறுகையில், மனவளர்ச்சி குன்றிய மகளை கரோனா ஊரடங்கு காரணமாக பராமரிக்க முடியவில்லை. வருமானமும், தொழிலும் இல்லாத நிலையில் பட்டினியில் வாழ்ந்துவருகிறேன். எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மனவளர்ச்சி குன்றிய பெண் பாலியல் வன்புணர்வு: குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.