ETV Bharat / city

தமிழ்நாட்டில் தியேட்டர்கள் மூடல்? - HC

திரையரங்குகள், 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதித்து பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

theatres
theatres
author img

By

Published : Oct 30, 2021, 8:55 AM IST

Updated : Oct 30, 2021, 6:31 PM IST

மதுரை : திரையரங்குகள், 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதித்து பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தூத்துக்குடியைச் சேர்ந்த சிவமுருகன் ஆதித்தன் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருக்கிறார்.

அதில், "தற்போது தொடர்ச்சியாக திருவிழா காலமாக இருப்பதால், கரோனா நோய் தடுப்பு வழி முறைகளை, பொதுமக்கள் பின்பற்றுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.

Petition filed HC against allows movie theatres to100% occupancy
தமிழ்நாட்டில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு எதிர்ப்பு!

கரோனா நோய்த் தொற்று பாதிப்பு குறைந்ததன் காரணமாக 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. தமிழ்நாடு இன்னும் கரோனாவின் பிடியிலிருந்து விடுபடவில்லை. இந்நிலையில் திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கரோனா நோய் தொற்று பரவல் அதிகரிக்கவே காரணமாக அமையும். திரையரங்கங்கள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்கும் போது தகுந்த இடைவெளியை முறையாக பின்பற்றுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு.

கரோனா முதல் அலையின் போதே மாஸ்டர் பட வெளியீட்டின் போது கரோனா நோய்த்தடுப்பு விதிகள் மீறப்பட்டதாக 50க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தற்போது தீபாவளியை ஒட்டி எனிமி, வா டீல் ஆகிய உள்ளிட்ட படங்கள் திரைக்கு வரவுள்ளன.

மதுரை உயர் நீதிமன்றம்

இது கரோனா பரவலுக்கு காரணமாக அமையும். எனவே சினிமா திரையரங்குகள்ள், 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதித்து பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பை ரத்து செய்தும், நவம்பர் 3, 4 தேதிகளில் திரையரங்குகளை மூடவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இதையும் படிங்க : வெறிச்சோடிய திரையரங்குகள் - காரணம் கதைப் பஞ்சமா? கரோனா அச்சமா?

Last Updated : Oct 30, 2021, 6:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.