மதுரையைச் சேர்ந்த ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல்செய்திருந்தார்.
அதில், "தமிழ்நாட்டில் தற்போது நோய்த்தொற்றின் இரண்டாம் அலை பரவிவருகிறது. பல்வேறு நாடுகளில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுவருகின்றன. அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்களும் மாவட்டங்கள், அரசு மருத்துவமனைகளில் கரோனா பரவலைத் தடுக்க துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அத்தோடு மருத்துவமனைகளில் போதுமான அளவு ஆக்சிஜன், வென்டிலேட்டர், ரத்தம், மருந்துப் பொருள்கள் ஆகியவை போதுமான அளவில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
கரோனாவால் பாதிக்கப்பட்டவரை உடனடியாகக் கண்டறியும் வகையில் பரிசோதனை மையங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். ஆகவே இவற்றைக் கருத்தில்கொண்டு கரோனாவின் இரண்டாம் அலை பரவலைத் தடுக்கும் வகையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும், மருத்துவமனைகளில் தேவையான வசதிகள், மருந்துகள் போதுமான அளவில் இருப்பதை உறுதிப்படுத்தவும், பரிசோதனை மையங்களை அதிகரிக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு தமிழ்நாடு சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: முஷ்டி முறுக்கும் நாம் தமிழர்... சட்டப்பேரவைக்குள் நுழையுமா?