உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (ஜன.17) கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்றுவருகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மேடைக்கு வந்து ஜல்லிக்கட்டு போட்டிகளைக் கண்டுகளித்துவருகின்றனர்.
இதற்கிடையே தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் தனது குடும்பத்தாருடன் மேடையில் அமர்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளை ரசித்துவருகிறார். அவருக்காக மேடையின் பின்புறம் ஒரு கேரவன் கொண்டுவந்து நிறுத்தப்பட்டுள்ளது.
அவ்வப்போது அதில் ஓய்வெடுக்கவும் இயற்கை உபாதையைக் குறைக்கவும் தனது குடும்பத்தாரின் வசதியை கருதியும் இந்த கேரவன் ரவீந்திரநாத் குமாரின் குடும்பத்திற்காக தனிப்பட்ட முறையில் மேடைக்குப் பின்புறமாகக் கொண்டுவந்து நிறுத்தப்பட்டுள்ளது.
இது அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவைப் பொறுத்தவரை அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவுக்கு பிறகு தனி ஒரு நபருக்காக கேரவன் கொண்டுவந்து நிறுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
இதையும் படிங்க: