ETV Bharat / city

தமிழர்களை புறக்கணிக்கும் என்.எல்.சி நிர்வாகம் - எம்.பி சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

author img

By

Published : Apr 23, 2022, 8:59 PM IST

என்.எல்.சி நிர்வாகம் பல்வேறு வழிகளில் தமிழர்களை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். என்.எல்.சி நிர்வாகத்தால் நடத்தப்படும் தேர்வு, தமிழர்களுக்கான வாய்ப்பை கொடுப்பதா? அல்லது பறிப்பதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

NLC
NLC

மதுரை: இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "நெய்வேலி அனல் மின் நிறுவனத்தில் பட்டதாரி நிர்வாக பயில்நர் (Graduate Executive Trainees) பதவிக்கான 300 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிக்கையை என்.எல்.சி அண்மையில் வெளியிட்டு இருந்தது.

ஏற்கனவே 2020ஆம் ஆண்டில் இதே பதவிக்கான பணி நியமனங்கள் நடைபெற்றன. ஆனால் 2022ஆம் ஆண்டில் தேர்வு முறைமையில் ஒரு மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. GATE 2022 மதிப்பெண் அடிப்படையில் தேர்வு பட்டியல் அமையும் என்று அறிவிக்கப்பட்டது. GATE 2022 தேர்வுகள் தகுதியாக நிர்ணயிக்கப்படும் என்று தெரிந்திருந்தால் பலர் தயாராகி இருப்பார்கள்.

ஆனால் போதிய அவகாசம் தரப்படாமலேயே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே GATE 2022 எழுதாதவர்கள் தேர்வு முறைமைக்கு வெளியே நிறுத்தப்பட்டுவிட்டனர். இது அநீதியானது. சமவாய்ப்பை மறுப்பது. ஏற்கெனவே தேர்வுப் பட்டியலில் தமிழர்களுக்கான பிரதிநிதித்துவம் கேள்விக் குறியாகி இருக்கிறது.

2010-க்கு முன்பாக தேர்வுப் பட்டியலில் 80 சதவீதம் பேர் வரை கூட தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இடம் பெற்றதுண்டு. இது 2020ஆம் ஆண்டில் 5 சதவீத்திற்கும் கீழே போய்விட்டது. இந்த தேர்வுப் பட்டியல் வெளிவந்தால் பேரதிர்ச்சியை தரக்கூடும். 300 பேர் கொண்ட தேர்வுப் பட்டியலில் ஒரு தமிழராவது இருப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து நான் என்.எல்.சி தலைவர் ராகேஷ் குமாருக்கு எழுதியுள்ள கடிதத்தில், அறிக்கை எண் 02/2022ஐ ரத்து செய்ய வேண்டும். தேர்வுப் பட்டியலை வெளியிட வேண்டாம். மீண்டும் முந்தைய முறைமையின் அடிப்படையில் தேர்வை நடத்த வேண்டும். குறிப்பிட்ட சதவீதம் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைக்க எதிர்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.