சமீபத்தில் வெளியான பிகில் படத்தில் தனது காதலை ஏற்றுக் கொள்ளாததால் பெண்ணின் மீது ஒருதலையாக காதலித்த இளைஞர் திராவகம் வீசும் நிகழ்வும் இதனால் பாதிக்கப்பட்ட பெண் அதிலிருந்து வெளிவந்து தனது கனவுகளை நோக்கி பயணப்படும் ஒரு காட்சி இருக்கும். எல்லோரையும் நெகிழ்ச்சியடைய வைத்த இந்தக் காட்சி திரையில் மட்டமல்லாது நிஜ வாழ்க்கையிலும் நடக்கும் என்பதற்கு சான்றாகத் திகழ்கிறார் நேபாளத்தைச் சேர்ந்த பிந்தபசினி கன்சக்கர் (Bindabasini kansakar).
நேபாள் ஹெட்டாடா பகுதியைச் சேர்ந்தவர்கள் மது கன்சக்கர், பைதேஹி கன்சக்கர் தம்பதி. இவருடைய மகள்தான் பிந்தபசினி கன்சக்கர். இவர் 12ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த திலீப் ராஜ் கேசரி என்ற இளைஞர் பிந்தபசினியை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த பிந்தபசினியை பலமுறை தொந்தரவு செய்த திலீப் சிறிது நாள்களுக்கு பிறகு அவரது முகத்தில் திராவகம் வீசியுள்ளார்.
இது ஒருபுறமிருக்க மற்றொருபுறம் தனக்கு ஏற்பட்ட இந்த விபத்திலிருந்து தான் மீண்டு வருவதற்காக சிகிச்சையையும் மேற்கொண்டுவருகிறார். இதற்காக மதுரையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஆறு ஆண்டுகளாக, சிகிச்சை மேற்கொண்டு தான் இழந்த அழகிய தோற்றத்தை தற்போது மீண்டும் பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: