ETV Bharat / city

ஆரம்ப சுகாதார நிலைய இடமாறுதல் மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி

author img

By

Published : Apr 7, 2022, 8:51 AM IST

Updated : Apr 7, 2022, 9:08 AM IST

நாகர்கோவில் முட்டம் ஆரம்ப சுகாதார நிலைய இடமாறுதல் மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

நீதிபதி உத்தரவை ரத்து செய்ய கோரிய வழக்கு- உத்தரவை உறுதி செய்த நீதிமன்றம்

மதுரை: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த பெமிலா உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "நாகர்கோவில் முட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து, என்னை பரமக்குடி நயினார் கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இடமாறுதல் செய்ததை ரத்து வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பணியிடமாறுதல் என்பது அரசு ஊழியர்கள் உரிமையாக கோர முடியாது. மனுதாரர் நிர்வாக காரணங்களுக்காகவே பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். எனவே வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பெமிலா மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று (ஏப். 6) விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

இதையும் படிங்க:சென்னையில் 49.2 கிலோ போதைப் பொருள் பறிமுதல்

Last Updated : Apr 7, 2022, 9:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.