ETV Bharat / city

நாகர்கோவில், குருவாயூருக்கு ரயில் சேவை தொடக்கம் - தென்னக ரயில்வே அறிவிப்பு! - ரயில் சேவைகள் தொடக்கம்

மதுரை வழியாக நாகர்கோவில், கோயமுத்தூர், சென்னைக்கு ரயில் சேவைகள் வருகின்ற டிசம்பர் 8ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

southern_railway
southern_railway
author img

By

Published : Dec 1, 2020, 4:45 AM IST

மதுரை: கரோனா பெருந் தொற்றுக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு மேல் ரயில்கள் இயக்கப்படவில்லை. இந்நிலையில் மதுரை வழியாக செல்லும் சில எக்ஸ்பிரஸ் ரயில்களின் அட்டவணையை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது. அதில் வரும் டிச., 8ஆம் தேதி முதல் ரயில் சேவைகள் தொடங்கப்பட உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

தொடங்கப்பட உள்ள ரயில் சேவைகளின் விவரம்: டிச., 10ஆம் தேதி முதல் சென்னை எழும்பூரில் இருந்து மதுரை வழியாக நாகர்கோவிலுக்கு வாராந்திர அதிவேக சிறப்பு ரயில் ஒவ்வொரு வியாழன் அன்றும் இயக்கப்பட உள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து வியாழக்கிழமை மாலை 6.55 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 2.30 மணிக்கு மதுரையை அடைவதுடன், காலை 7:30 மணி அளவில் நாகர்கோவிலைச் சென்றடையும்.

அதே மார்க்கத்தில், வெள்ளிக்கிழமை மாலை 4:15 மணிக்கு, நாகர்கோவிலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், அன்று இரவு 9 மணி அளவில் மதுரையை சென்றடைந்து, மறுநாள் காலை 4.45 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் சென்று சேரும்.

அதேபோல, நாகர்கோவிலில் இருந்து கோயம்புத்தூருக்கு அதிவேக சிறப்பு ரயில் வருகின்ற டிசம்பர் 8ஆம் தேதி முதல், நாள்தோறும் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் தினமும் இரவு 7.30மணிக்கு, கோயம்புத்தூரில் இருந்து புறப்பட்டு நள்ளிரவு 12.35 மணி அளவில் மதுரையை வந்தடைவதுடன், மறுநாள் காலை 5.05 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

அதே மார்க்கத்தில் நாகர்கோவிலிலிருந்து காலை 9.45 மணிக்கு புறப்படும் அந்த ரயில், பிற்பகல் 1.45 மணிக்கு மதுரையை வந்தடைவது உடன், அன்றைய தினம் இரவு 7.15 மணிக்கு கோயம்புத்தூரை சென்றடையும்

வருகின்ற டிசம்பர் 8ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து மதுரை வழியாக கேரள மாநிலம் குருவாயூர் வரை நாள்தோறும் சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது. தினமும் காலை 8.25மணிக்கு, சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த ரயில், திருச்சி, திண்டுக்கல், வழியாக மாலை 4.10 மணிக்கு மதுரையை வந்தடைந்து, திருநெல்வேலி, நாகர்கோவில், திருவனந்தபுரம் வழியாக மறுநாள் காலை 6:40 மணிக்கு குருவாயூர் சென்றடையும்.

அதே மார்க்கத்தில் குருவாயூரிலிருந்து 9.30 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.05 மணிக்கு மதுரையை வந்தடையும், பிறகு மறுநாள் இரவு 8.35க்கு சென்னை எழும்பூர் வந்தடையும் என தென்னக ரயில்வேயின் அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தண்டவாளம் அருகே மரம் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு; எக்ஸ்பிரஸ் ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.