இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "மதுரை மருத்துவக் கல்லூரி நுண்ணுயிரி துறையில் கரோனா சோதனை நேற்று (ஜூன் 18) ஒரே நாளில் 2500 என்ற எண்ணிக்கையில் நடத்தப்பட்டுள்ளது. கடந்த இரு வாரங்களாக மதுரைக்கு வருபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமானதைத் தொடர்ந்து நாள்தோறும் 3000 எண்ணிக்கையில் சோதனை நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.
இதுவரை இல்லாத அளவுக்கு 2500 சோதனைகளை ஒரே நாளில் நடத்தியதற்காக நுண்ணுயிரி துறைத்தலைவர், ஆய்வாளர்கள், ஆய்வக உதவியாளர்கள், மருத்துவமனை முதல்வர், தேவையை புரிந்து கொண்டு சோதனையின் எண்ணிக்கையை உயர்த்த முயற்சித்த மாவட்ட ஆட்சியருக்கும் எனது பாராட்டுகள்.
நாம் முழுமையான சவால்களை நோக்கி நடந்து கொண்டிருக்கின்றோம். எனவே, வரும் நாள்களில் சோதனையின் எண்ணிக்கை குறைந்துவிடாமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.