ETV Bharat / city

ஏழு தமிழர்கள் விடுதலை: குடியரசு தலைவருக்கு சு.வெங்கடேசன் கடிதம் - உச்ச நீதிமன்றம் கருத்து

மதுரை: ராஜீவ் காந்தி கொலையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஏழு தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரைக்க வேண்டும் என வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்
author img

By

Published : Nov 5, 2020, 1:29 PM IST

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், ”முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டு, 30 வருடங்களுக்கும் மேலாக சிறையில் தங்களது வாழ்க்கையை கழித்து வரும் 7 பேரின் துயரை எடுத்துரைக்கவும், அவர்களது விடுதலைக்கு ஏற்பாடு செய்யவும் தங்களிடம் கோரிக்கை வைக்கவே இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

இந்திய அரசியல் சட்ட அமைப்பின்படி வாழ்நாள் சிறை என்பதற்க்கு காலம் வரையறுக்கப்படவில்லை என்றாலும், பொதுவாக 14 வருடங்கள் என்பது ஒரு நியதியாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, இந்த 7 பேரும், இரண்டு வாழ்நாள் தண்டனைகளுக்கு மேலாகவே தண்டனை அனுபவித்து, தொடர்ந்து சிறையில் இருக்கின்றனர்.

சு.வெங்கடேசன் கடிதம்
சு.வெங்கடேசன் கடிதம்

தமிழ்நாட்டில் முக்கிய அரசியல் கட்சிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பல்வேறு அமைப்புகள் இந்த எழுவரின் விடுதலையை தொடர்ந்து கோரி வருகின்றன. மக்கள் மத்தியிலும் இவர்களின் விடுதலைக்கான விரிந்த ஏற்பு உள்ளது என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

சமீபத்தில், உச்ச நீதிமன்றம் இந்த பிரச்சினையில் ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று கருத்து வெளியிட்டதையும் இங்கு உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

இப்பிரச்சினையில், இனியும் தாமதிக்காமல் உடனடியாக முடிவெடுத்து 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரைக்க வேண்டும்; அந்த 7 பேரும் அதிகமான தண்டனையை ஏற்கனவே அனுபவித்து விட்டார்கள் என்கிற அடிப்படையில், இந்த விடுதலையை வழங்க வேண்டும் என்று மிகுந்த பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : பாஜக யோகேஷ் கவுடா கொலை வழக்கு: சிபிஐ பிடியில் வினய் குல்கர்னி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.