மதுரையில் கல்விக்கடன் கூடுதலாக வழங்குவதற்குகாக வங்கி அலுவலர்களுடனான 3ஆவது முறை ஆய்வுக்கூட்டம் இன்று (அக்.08) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், வங்கி மேலாளர் , மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், கல்வித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சு. வெங்கடேசன், “இதுவரை மதுரை மாவட்டத்தில் 818 மாணவர்கள் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அதில் 625 மாணவர்களுக்கு கல்விக் கடனாக 54கோடியே 22லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
கல்விக்கடன் முகாம்
126 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. 64 மனுக்கள் சரியான ஆவணங்கள், வங்கி மாறுதல்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த வாரங்களில் இன்னும் அதிகமான மாணவர்களுக்கு கல்விக்கடன் கிடைத்திட சிறப்பு கடன் முகாம்கள் நடத்த ஆலோசிக்கப்ட்டது.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, தனியார் வங்கிகளின் நிறை குறைகள் ஆலோசிக்கப்பட்டு அடுத்தகட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கல்விக் கடன் என்ற பெயரில் ஆன்லைன் மோசடி: மாணவி தற்கொலை