ETV Bharat / city

விந்திய மலைக்கு கீழே இந்தியா இல்லையா? - மக்களவையில் சு.வெங்கடேசன் கேள்வி! - disbandment of 16 member panel

விந்திய மலைக்கு கீழே இந்தியா இல்லையா..? இந்திய பண்பாட்டின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள 16 பேர் கொண்ட குழுவை உடனடியாக கலைக்க வேண்டும் என்று மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் மக்களவையில் குரல் எழுப்பியுள்ளார்.

mp su venkatesan demanding immediate disbandment

author img

By

Published : Sep 21, 2020, 8:48 PM IST

டெல்லி: இந்திய பண்பாட்டின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள 16 பேர் கொண்ட குழுவை உடனடியாக கலைக்க வேண்டும் என்று மக்களவை உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.

மக்களவையில் நேரமில்லா நேரத்தில்(ஜீரோ ஹவர்) சு.வெங்கடேசன் பேசியதாவது, ”12 ஆயிரம் ஆண்டுகால இந்திய பண்பாட்டின் தோற்றம், பரிமாணத்தை ஆய்வு செய்வதற்காக 16 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக கேள்வி ஒன்றுக்கு கலாச்சாரத் துறை அமைச்சர் பதில் சொல்லியிருக்கிறார்.

மக்களவையில் உறுப்பினர் சு வெங்கடேசன் பேச்சு

இந்தக் குழுவில் பன்மைத்தன்மை இல்லை. தென்னிந்தியரோ, வடகிழக்கு இந்தியரோ, சிறுபான்மையினரோ, தலித்தோ, பெண்ணோ இடம்பெறவில்லை. இந்து உயர் சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். மத்திய அரசு செம்மொழி என்று அங்கீகரித்த தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளின் ஆய்வாளர்கள் யாருக்கும் இதில் இடமில்லை. ஆனால் சாதி சங்க தலைவருக்கு இடமிருக்கிறது.

விந்திய மலைக்கு கீழே இந்தியா இல்லையா? வேத நாகரிகத்தினைத் தவிர வேறு நாகரிகம் இல்லையா? சமஸ்கிருதத்தைத் தவிர ஆதி மொழி இங்கு இல்லையா? ஜான் மார்ஷல், சுனிதிகுமார் சட்டர்ஜி தொடங்கி ஐராவதம் மகாதேவன், டோனி ஜோசப், ஆர்.பாலகிருஷ்ணன் வரையிலான அய்வாளர்களின் கண்டுபிடிப்புகளையெல்லாம் நிராகரித்து புராணங்களையே வரலாறு என நிறுவுவதற்கே இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

எப்படி மண்ணுக்குள் இருக்கும் வேர்களை விமானங்களில் பறந்துகொண்டு பார்க்க முடியாதோ, அதேபோல இந்த மண்ணின் பண்பாட்டினை சாதியத்தின் பீடங்களில் உட்கார்ந்திருப்பவர்களால் ஒரு போதும் எழுத முடியாது. எனவே இந்தக்குழுவை கலைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என வலியுறுத்தியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.