மதுரை விமானநிலையத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் பேசினார். அதில், ''உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சி, சிறப்பான ஆட்சி என்பதை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். அதனால்தான் நடக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோக வெற்றிபெறும். இந்த உள்ளாட்சித் தேர்தல் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோடியாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
பணப்பட்டுவாடா செய்ய திமுக முயற்சித்ததை, அதிமுக அரசு தடுத்து நிறுத்தியதால்தான் பிரச்னை. தோல்வி பயத்தால் திமுகவினர் பிரச்னைகளை கிளப்பிவருகின்றனர். இந்தத் தேர்தலில் அரசு அலுவலர்கள் பாரபட்சமில்லாமல் சரியான முறையில் பணி செய்திருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் சரியான நடவடிக்கை எடுத்து உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி தேர்தல் நியாயமாக நடந்து வருகிறது'' என்றார்.
இதையும் படிங்க: அமிதாப் பச்சனுக்கு தாதா சாஹேப் பால்கே விருது!