ETV Bharat / city

‘நெல் கொள்முதல் செய்ய விஏஓவிடம் சான்றிதழ் பெற வேண்டும்’ - அமைச்சர் மூர்த்தி - அமைச்சர் மூர்த்தி

நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வரும் விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றிதழ் பெற வேண்டும் என வணிகவரி அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மூர்த்தி
அமைச்சர் மூர்த்தி
author img

By

Published : Sep 24, 2021, 4:47 PM IST

மதுரை: அரும்பனூர் கிராமத்தில் அமைந்துள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கிவைத்தார். பின்னர், விவசாயிகளுக்கு மானிய விலையில் விவசாய பொருள்களை வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த மூர்த்தி, “கிராமப்புறங்களில் அந்தந்த பகுதியில் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் நெல், அந்தந்த பகுதியிலேயே கொள்முதல் செய்யப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் நெல் கொள்முதல் அந்தந்தப் பகுதி விவசாயிகள் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும், வேறு பகுதியில் இருந்து கொள்முதல் செய்யக்கூடாது என அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நெல் கொள்முதல் குறித்த விவரங்கள்

இதில் தவறு ஏற்படும் பட்சத்தில் நேரடியாக மாவட்ட ஆட்சியரிடமும், துறை அமைச்சரிடம் புகார் தெரிவிக்கலாம், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளிடமிருந்து பெறப்படும் நெல்லுக்கு உரிய விலை அரசு மூலம் வழங்கப்படுகிறது.

கடந்த ஆட்சியாளர்கள் போல் ஒரே இடத்தில் நெல் கொள்முதல் செய்யவில்லை. எங்கெங்கு நெல் அறுவடை செய்யப்படுகிறதோ, அங்கெல்லாம் சென்று கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு விவசாயிகளிடம் பெறப்படுகிறது. இதில், விவசாயிகள் வழங்கும் நெல் தவிர வியாபாரிகளின் நெல் ஒரு விழுக்காடுகூட வழங்கப்படமாட்டாது.

அதேபோல இப்போது புதிய முறை கையாளப்படுகிறது. ஒரு விவசாயி தன் நெல் கொள்முதல் இடத்திற்கு நெல்லை கொண்டு வரும்போது அவர் பட்டா சிட்டா அடங்கல் உள்ளிட்ட விவரங்களை விஏஓவிடம் காண்பித்து அந்தப் பகுதி விவசாயி என சான்றிதழ் பெற்று வர வேண்டும் அப்போதுதான் அவர்களிடம் நெல் வாங்கப்படும்” என்றார்.

பழுப்பு அரிசி வாங்காததற்கான காரணங்கள்

தொடர்ந்து விவசாயிகளிடமிருந்து ஈரப்பதமுள்ள நெல்லை வாங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, “ஏன் ஈரப்பதமுள்ள நெல்லை வாங்குவதில்லை என்றால் ஈரப்பதமுள்ள நெல்லை நாம் அரிசி அலையில் அரைக்கும்போது அது பழுப்பு அரிசியாக வருகிறது.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மூர்த்தி

இது ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது. தரமான நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இருப்பினும் ஈரப்பதம் இருப்பதால் அது பழுப்பு அரிசியாகவுள்ளது எனவே அது ஓரிரு நாள் காய வைத்து விவசாயிகள் தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.

இதையும் படிங்க: ‘கலைஞர் நூலகம் நவீன முறையில் அமையும்’ - அமைச்சர் மூர்த்தி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.