ETV Bharat / city

நீட் தேர்வை ரத்து செய்ய தமிழ்நாடு அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் - அமைச்சர் எ.வ. வேலு - நீட் தேர்வை ரத்து செய்ய தமிழ்நாடு அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும்

நீட் தேர்வை ரத்து செய்வது தமிழ்நாடு அரசின் தலையாய கடமை; அதற்கான அழுத்தங்களை தமிழ்நாடு அரசு தொடர்ந்து கொடுக்கும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எ.வ. வேலு

author img

By

Published : May 19, 2022, 5:40 PM IST

மதுரை புதுநத்தம் சாலையில் 114 கோடி ரூபாய் மதிப்பில் கலைஞர் நினைவு நூலக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வேலு, “கலைஞர் நினைவு நூலகம், அதி நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு கட்டுமான பணி விரைவாக நடைபெற்று வருகிறது. கட்டுமானப் பணி 90 விழுக்காடு தற்போது நிறைவு பெற்றுள்ளது. அடுத்த மாத இறுதிக்குள் 100 விழுக்காடு கட்டுமானப் பணி நிறைவு பெறும். அதனைத்தொடர்ந்து உள்கட்டமைப்புப் பணிகள் நடைபெறும்.

மதுரையில் 900 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் முடிக்கப்பட்ட பணிகள் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோரிப்பாளையம் மேம்பால ஒப்பந்தத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எ.வ. வேலு

நீட் தேர்வை ரத்து செய்வது தமிழ்நாடு அரசின் தலையாய கடமை. அதற்கான அழுத்தங்களை தமிழ்நாடு அரசு தொடர்ந்து கொடுத்து வரும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: திருச்சி: சிக்கலில் முடிந்த காங்கிரஸ் போராட்டம்..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.