ETV Bharat / city

மானாமதுரையில் பாலம் அமைக்கத் தடை கோரிய மனு: உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு - மதுரை செய்திகள்

மானாமதுரை அருகே ஆயக்கட்டுப் பகுதியில் பாலம் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது எனக் கோரிய மனுவில், சிவகங்கை பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
author img

By

Published : Nov 29, 2021, 3:05 PM IST

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கீழப்பசலையைச் சேர்ந்த சங்கையா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளார்.

அதில் ”எங்கள் பகுதியான கீழபசலை, மேல பசலை, சங்கமங்கலம் ஆகிய மூன்று ஊர்களில் சுமார் ஆயிரம் பேர் வசித்துவருகிறோம். எங்கள் பகுதியில் வரும் ஆயக்கட்டு மூலமாக சுமார் ஆறாயிரத்து 500 ஏக்கர் பாசனப் பகுதியில் விவசாயம் செய்துவருகிறோம்.

இந்தப் பகுதியில் உள்ள ஆதனூர் மதகு அருகே 2019ஆம் ஆண்டு கிருஷ்ணன் என்பவர் ஒரு பாலம் கோரி விண்ணப்பித்தார். இவருக்குப் பொதுப்பணித் துறை சார்பில் விதிமுறைகளுடன் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. அந்தப் பாலத்தின் வழியாக தற்போது விவசாய நிலங்களுக்குச் சென்றுவருகிறோம்.

இந்த நிலையில் தற்போது கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்காக, பாசன கால்வாயில் ஏற்கனவே உள்ள பாலத்தின் அருகேயே 100 மீட்டர் இடைவெளிக்குள் மற்றொரு பாலம் அமைப்பதற்காக பொதுப்பணித் துறையிடம் அனுமதி கோரியுள்ளார்.

அவருக்கு அனுமதி வழங்கும்பட்சத்தில் இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன், எங்கள் பகுதியில் உள்ள பாசன கால்வாயைத் தூர்வாருவதற்கு இயலாமல் போகும் இடர் உள்ளது. இதனால் எங்கள் பகுதியில் உள்ள விளைநிலங்களின் நீர் ஆதாரம் பாதிக்கப்படுவதுடன் எங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் இடர் உள்ளது.

எனவே ஏற்கனவே உள்ள பாலத்தின் அருகே மற்றொரு பாலம் கட்டுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கும் பொதுப்பணித் துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட வேண்டும்” எனத் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து சிவகங்கை பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் நான்கு வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

இதையும் படிங்க: விடுதலை கோரி நளினி தொடந்த வழக்கு விசாரணை 3 வாரங்கள் தள்ளிவைப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.