ETV Bharat / city

ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட 2ஆவது மனைவி தொடுத்த வழக்கு: கணவரின் பணப்பலன்களை வழங்க நீதிமன்றம் உத்தரவு

கணவரது பணப்பலன்களை வழங்ககோரி ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மனைவி தொடர்ந்த வழக்கில், வாரிசுதாரர்கள் தான் மற்றும் தனது பிள்ளைகள் மட்டுமே என மனுதாரர் உறுதிமொழி அளிக்க வேண்டும் எனவும்; அதனடிப்படையில் நான்கு வாரத்திற்குள் பணப்பலன்களை வழங்க வேண்டுமெனவும் கூறி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

wife who infected by HIV to get assets of her Husband

author img

By

Published : Apr 12, 2022, 3:52 PM IST

மதுரை: விருதுநகரைச் சேர்ந்த பெண் ஒருவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தனது கணவரின் பணப் பலன்களை தனக்கும், தனது குழந்தைகளுக்கும் வழங்கக் கோரி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நீதிபதி ஸ்ரீமதி விசாரித்தார். அப்போது "இந்த வழக்கைப் பொறுத்தவரை, மனுதாரரின் கணவர் 1992ஆம் ஆண்டு முதல் அரசு போக்குவரத்துக்கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பணியில் இருக்கும்போது உயிரிழந்துள்ளார். மனுதாரருக்கு, தனது பிள்ளைகளுமே வாரிசுதாரர்கள் எனக்கோரி பணப்பலன்களை வழங்குமாறு" மனுதாரர் கூறியுள்ளார். அப்போது மனுதாரரின் கணவர் ஏற்கெனவே வேறு ஒருவரை திருமணம் செய்து முறையாக விவாகரத்து பெறாமல் இருவரும் பிரிந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், கணவனின் முதல் மனைவி மற்றும் அவரது தாயாரும் இறந்துவிட்ட நிலையில், மனுதாரர் தனது பிள்ளைகளே வாரிசுகளாக இருப்பதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அத்தோடு மனுதாரர் அவரது மகனும் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்; அதனால், குடும்ப வறுமையைக் கருத்தில் கொண்டு பணப்பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறினார். இந்த வாதங்களுக்குப் பிறகு, நீதிமன்றம் பின்வரும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

மனுதாரர் தன்னையும், தனது பிள்ளைகளையும், அவரது கணவருக்கு வாரிசுதாரர்கள் என்றும்; வேறு யாரும் வாரிசுதாரர்கள் இல்லை என்றும் உறுதிமொழி பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும்; அதன் அடிப்படையில், ஓட்டுநராகப் பணிபுரிந்த மனுதாரரின் கணவரது பணப்பலன்களை 4 நான்கு வாரங்களுக்குள் வழங்க தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தின் செயலருக்கு உத்தரவிட்டு, வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: ஆன்லைன் விசாரணையில் பெண்ணிடம் ஒழுங்கீனம்... வழக்கறிஞருக்கு சிறை தண்டனை...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.