ETV Bharat / city

மீனாட்சி கோயில் யானை பார்வதிக்கு குளியல் தொட்டி: கோயில் நிர்வாகம் பரிசீலனை - மீனாட்சி அம்மன் கோயில் யானை பார்வதி

கண்புரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானை பார்வதிக்கு குளியல் தொட்டி அமைப்பதற்கான இடத் தேர்வு குறித்து கோயில் நிர்வாகம் பரிசீலனை செய்துவருகிறது.

http://10.10.50.85:6060/reg-lowres/29-July-2021/tn-mdu-07-mennakshi-temple-elebhant-script-7208110_29072021162426_2907f_1627556066_759.mp4

author img

By

Published : Jul 30, 2021, 1:52 AM IST

மதுரை: அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் யானை பார்வதி கண்ணில் புரை ஏற்பட்டுள்ளதால் கால்நடை மருத்துவ நிபுணர்கள் குழு மூலம் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக கோயில் நிர்வாகம், மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் யானையின் மன அழுத்தத்தைப் போக்கும்விதமாக குளித்து விளையாடும் வகையில் குளியல் தொட்டி அமைக்க அறநிலையத் துறை பரிந்துரைத்துள்ளது.

இதன் அடிப்படையில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் யானை பார்வதிக்கு குளியல் தொட்டி அமைக்கப்படும் இடத் தேர்வு தொடர்பாக பரிசீலனை நடைபெற்றுவருகிறது.

மீனாட்சி கோயில் யானை பார்வதிக்கு குளியல் தொட்டி

இது தொடர்பாக கோயில் இணை ஆணையர் க. செல்லத்துரை கூறும்போது, "யானை பார்வதிக்கு சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் யானை தங்கியுள்ள பகுதியில் தற்போது மண் மேடு ஒன்றுள்ளது.

யானைக்கு ஏதுவாக மேலும் ஒரு மண் மேடு அமைக்கப்பட உள்ளது. இதேபோல குளியல் தொட்டியும் அமைக்கப்பட உள்ளது. யானை தங்கியுள்ள பகுதியில் புதிய மண்மேடு அமைக்கப்பட்ட பின்னர் போதுமான இடம் இருந்தால் அங்கு குளியல் தொட்டி அமைக்கப்படும்.

கோயிலில் யானை தங்கியுள்ள பகுதி மட்டுமே மண் தரை பகுதியாக உள்ளது. கோயிலில் வேறு இடங்களில் பள்ளம் தோண்ட முடியாது.

எனவே கோயிலில் இடம் இல்லாவிட்டால் வெளியில் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் குளியல் தொட்டி அமைக்கப்படும். இடம் தேர்வு செய்யும் பணி பரிசீலனையில் உள்ளது" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.