Ayyappa devotees: தமிழ்நாட்டில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்துள்ள காரணத்தால் தமிழ்நாடு அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தது. வார இறுதி நாள்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாள்களிலும் வழிபாட்டுத் தலங்களுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று (ஜன.07) முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் வெள்ளி, சனி ஞாயிறு ஆகிய மூன்று நாள்கள் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்பதால், உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தற்போது மார்கழி மாதம் என்பதால் அதிக அளவில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து வழிபாட்டிற்காக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தருவது வழக்கம்.
தற்போது தடை விதிக்கப்பட்டு இருக்கின்ற காரணத்தால் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மீனாட்சி அம்மனை தரிசிக்க வந்து ஏமாற்றத்துடன் சென்றனர்.
அதேபோன்று தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்திலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'அம்மா உணவகம் மூடப்படாது, இதுவே என் முடிவு'- முதலமைச்சர் ஸ்டாலின் உரை