ETV Bharat / city

இன்று மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் - இன்று மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்

சித்திரைப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரையின் அரசி மீனாட்சிக்கும் - சுந்தரேஸ்வரருக்குமான திருக்கல்யாணம் 2 ஆண்டுகளுக்கு பின்னர் வெகு விமரிசையாக பக்தர்கள் முன்னிலையில் இன்று காலை 10.35 மணிக்கு நடைபெறவுள்ளது.

மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
author img

By

Published : Apr 14, 2022, 7:47 AM IST

Updated : Apr 14, 2022, 8:01 AM IST

மதுரை: பண்பாட்டின் தலைநகரம் மதுரையில் 20 நாள்கள் நடைபெறும் 'திருவிழாக்களின் திருவிழா' - சித்திரைப் பெருவிழாவில் ஏப்ரல் 5 முதல் 16 ஆம் தேதி வரை மீனாட்சி அம்மன் கோயில் விழாக்களும், ஏப்ரல் 12 முதல் 21 ஆம் தேதி வரை கள்ளழகர் கோவில் விழாக்களும் நடைபெறும்.

இதில், மீனாட்சி அம்மன் கோயில் விழாக்கள் ஏப்ரல் 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக தினமும் காலை, மாலை வேளைகளில் கற்பக விருட்சம், சிம்மம், தங்க சப்பரம், பூதம், அன்னம், கைலாச பர்வதம், காமதேனு, தங்கப்பல்லக்கு, தங்க குதிரை, தங்க ரிஷபம், நந்திகேசுவரர், யாளி, வெள்ளி சிம்மாசனம் உள்ளிட்ட வாகனங்களில் திருவீதியுலா வந்தனர்.

மதுரையை சித்திரை முதல் ஆவணி மாதம் வரை 4 மாதங்கள் மீனாட்சியும், ஆவணி முதல் சித்திரை மாதம் வரை 8 மாதங்கள் சுந்தரேசுவரரும் ஆட்சி செய்வதாக மதுரை மக்களிடம் நம்பிக்கை உண்டு. அதனடிப்படையில், மதுரையின் அரசியாக மீனாட்சிக்கு முடிசூட்டும் பட்டாபிஷேக விழா ஏப்.12 ஆம் தேதி இரவு கோலாகலமாக நடைபெற்றது.

மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

திருக்கல்யாணத்திற்கு முன்னதாக மீனாட்சியும் - சுந்தரேசுவரரும் வெள்ளி சிம்மாசனத்தில் நான்கு சித்திரை விதிகளில் வலம் வந்து, முத்துராமைய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாகி பின் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளுவர். இதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளுவர்.

அதனைத் தொடர்ந்து, காலை 10:35 மணி முதல் 10:59 மணிக்குள் மிதுன லக்னத்தில் திருக்கல்யாணம் நடைபெறும். 2 டன் வண்ண மலர்களால் திருக்கல்யாண மேடை அலங்கரிக்கப்பட்டுள்ளது.

திருக்கல்யாண நிகழ்வை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள்: இலவச தரிசனத்திற்கு தெற்கு கோபுர வாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். முக்கிய பிரமுகர்கள், கட்டளைதாரர்கள், உபயதாரர்களுக்கு மேற்கு கோபுர வாசல் வழியாகவும் ரூ.500, ரூ.200 கட்டண சீட்டு பெற்றுள்ள பக்தர்கள் வடக்கு கோபுர வாயில் வழியாகவும் அனுமதிக்கின்றனர்.

மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

கட்டண தரிசனத்தில் 5200 பேருக்கும், இலவச தரிசனத்தில் 6 ஆயிரம் பேருக்கும் அனுமதி: காலை 7 மணி முதல் பக்தர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்படுவர். பக்தர்கள் மொபைல் போன் உள்பட எந்தப் பொருள்களையும் எடுத்து செல்ல அனுமதி இல்லை.

கரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல்துறை சார்பில் முக கவசம், குடி தண்ணீர் வழங்கப்படுகிறது. வாகனங்களை நிறுத்த அனுமதி பெற்றவர்களுக்கு ஆவணி வீதிகளிலும், அனுமதி பெறாத நபர்களுக்கு தெற்கு, வடக்கு மாசி வீதிகளிலும் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு. மாவட்டம் முழுவதிலும் இருந்து 75 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க ட்ரோன் கேமரா, சிசிடிவி கேமரா, கண்காணிப்பு டவர், குற்றவாளிகளை அடையாளம் காணும் செயலிகள், தனிப்படை போலீசார் என மொத்தம் 3,500 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

100க்கும் மேற்பட்ட சீருடை அணியாத காவல்துறை கண்காணிப்பு பக்தர்கள் அவசர உதவிக்கு காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண்: 830000-17920 தொடர்பு கொள்ளலாம். 'Maamadurai' மொபைல் செயலி மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம், வாகன நிறுத்துமிடம், கோயிலை சுற்றி உள்ள கழிப்பறை, குடிநீர் வசதிகள் ஆகியவற்றை Live tracking மூலமும் கண்டறியலாம் எனவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

கரோனா பெருந்தொற்று காரணமாக மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க: அலங்காரப் பிரியர் மட்டுமல்ல... சமத்துவ நாயகரும்கூட...' - கள்ளழகரின் மற்றொரு பக்கம்!

Last Updated : Apr 14, 2022, 8:01 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.