மதுரை: திருமங்கலம் அருகேயுள்ள அனுப்பபட்டி கிராமத்தில் கருப்பையா முத்தையா கோயில் உள்ளது. இந்தக் கோயில் திருவிழா ஆண்டு தோறும் மார்கழி மாதம் நடைபெறும். இதில் பெண்கள் பங்கேற்க அனுமதி இல்லை. இது ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் பாரம்பரிய திருவிழாவாகும்.
இந்நிலையில், நேற்று முத்தையா கோயில் திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த திருவிழாவில் 60க்கும் மேற்பட்ட கிடாய் ஆடுகள் வெட்டப்பட்டன. பின்னர், சமைத்து கறி விருந்து படையல் செய்யப்பட்டு ஆண்கள் மட்டும் சாப்பிட்டனர்.
இந்த விருந்தில் கரடிக்கல், செக்கானூரணி, மேலஉரப்பனூர் உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள் கலந்து கொண்டனர்.
இலை விருந்து முடிந்தவுடன், இலையை எடுக்க மாட்டார்களாம். மேலும், அந்த இலைகள் காய்ந்த பிறகு தான் பெண்கள் அந்த பகுதிக்குச் செல்ல வேண்டும். இந்த விநோத திருவிழாவில் சுற்றுவட்டாரக் கிராம மக்கள் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: புத்தாண்டு விருந்துக்கு ஆடு திருடிய சப்-இன்ஸ்பெக்டர் கைது!