சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த சிவகுமரன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், "ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராடிய மருது பாண்டிய சகோதரர்களின் குடும்ப வாரிசுகளுக்கு, ஓய்வு ஊதியம் வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதனடிப்படையில், எனது தந்தை மீனாட்சிசுந்தரம் உயிரிழக்கும் வரை குடும்ப ஓய்வூதியத்தை பெற்றுவந்தார்.
அவருக்கு பின் குடும்ப ஓய்வூதியத்தை எனது தந்தையின் வாரிசுகளுக்கு வழங்க கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தேன். ஆனால், சூடியூரில் நான் வசிக்கவில்லை என்பதால், குடும்ப ஓய்வூதியம் முடியாது என்று கூறி மனுவை நிராகரித்துவிட்டனர். ஆகவே, எனக்கு குடும்ப ஓய்வூதியத்தை வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை நேற்று (ஏப்.20) விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், இந்த மனுவை தமிழ்நாடு பொதுத்துறை செயலர் பரிசீலித்து, 6 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.
இதையும் படிங்க: மருது பாண்டியர்கள் குரு பூஜை நடத்த அனுமதி கோரிய வழக்கு ஒத்திவைப்பு