மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணன்(50). இவருடைய மனைவி வசந்தி(43). இருவரும் இருசக்கர வாகனத்தில் கன்னியாகுமரி நான்கு வழிச் சாலையை கடக்க முற்பட்டபோது, மதுரையிலிருந்து திருமங்கலம் நோக்கிச் சென்ற கார் அவர்களது இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் கணவன் - மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்த ஆஸ்டின்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன் - மனைவி இருவரும் இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.