மதுரையிலிருந்து தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் செல்லும் சிறப்பு ரயில் ஏப்ரல் மாதம் மட்டுமே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜூலை மாதம் வரை சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், செகந்தராபாத் TO மதுரை வாராந்திர சிறப்பு ரயில் (07191) செகந்திராபாத்தில் இருந்து மே 2ஆம் தேதி முதல் ஜூலை 25ஆம் தேதி வரை இயக்கப்படும். இந்த ரயில் திங்கட்கிழமைகளில் இரவு 09.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 08.45 மணிக்கு மதுரை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் மதுரை TO செகந்தராபாத் வாராந்திர சிறப்பு ரயில் (07192) மதுரையில் இருந்து மே 4ஆம் தேதி முதல் ஜூலை 27ஆம் தேதி வரை இயக்கப்படும். இந்த ரயில் புதன்கிழமைகளில் அதிகாலை 05.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.25 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.
இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், விருத்தாச்சலம், விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், பாபட்லா, தெனாலி, குண்டூர், மிரியால்குடா, நலகொண்டா ஆகிய ரயில் நிலையங்களில் வழியாக செல்லும்.
இதில், ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, மூன்று குளிர்சாதன ஓரடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 ரயில் மேலாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் உள்ளன.
இதையும் படிங்க: 14 ஆண்டுகளுக்குப் பிறகு தர்மபுரி வழித்தடத்தில் புதிய ரயில் சேவை