ETV Bharat / city

குஜராத் மீனவர்களுக்கு ஒரு நியாயம்; தமிழ்நாடு மீனவர்களுக்கு ஒரு நியாயமா? - சு வெங்கடேசன் கேள்வி - parliament news in tamil

குஜராத் மீனவர்களுக்கு ஒரு நியாயம், தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஒரு நியாயமா? என மக்களவையில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வியெழுப்பினார்.

madurai mp su venkatesan, su venkatesan parliament speech, su venkatesan parliament latest speech, su venkatesan condemn union government, tamil nadu fishermen issue in lok sabha, su venkatesan on fishermen issue, சு வெங்கடேசன் எம் பி, மீனவர் பிரச்னை, நாடாளுமன்ற சு வெங்கடேசன் பேச்சு, மக்களவை உறுப்பினர் சு வெங்கடேசன், மீனவர் பிரச்னை குறித்து சு வெங்கடேசன் எம் பி, நாடாளுமன்ற செய்திகள், மக்களவை செய்திகள், lok sabha news tamil, parliament news in tamil
சு வெங்கடேசன்
author img

By

Published : Dec 3, 2021, 7:44 PM IST

மதுரை: மக்களவையில் இன்று (டிச.3) பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தமிழ்நாடு மீனவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து கீழ்கண்ட கருத்தை முன்வைத்தார்.

அவர் பேசும்போது, "தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதை இந்த அவையின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இது சார்ந்து ஒன்றிய அரசு எந்தவித தலையீடும் இல்லாமல் அமைதியாக இருக்கிறது.

குறிப்பாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் துவாரகா மாவட்டத்தில் ஓகா என்ற இடத்தில் குஜராத் மீனவர் பாகிஸ்தான் கடற்படையினரால் தாக்கப்பட்ட நிகழ்வையொட்டி, உடனடியாக ஒன்றிய அரசு தனது கண்டனத்தை பதிவுசெய்தது. அது மட்டுமல்ல பாகிஸ்தான் தூதரக உயர் அலுவலர்களை அழைத்து நேரடியாகவும் கண்டனத்தை பதிவு செய்தது என்பதை இந்த அவைக்கு கவனப்படுத்துகிறேன்.

ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டு இருக்கிறார்கள். பலர் சிறையிலே அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். இது சம்பந்தமாக அக்டோபர் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிய அரசின் தலையீட்டைக் கோரி கடிதம் எழுதியிருக்கிறார்.

மக்களவையில் சு வெங்கடேசன் பேச்சு

அதற்கு, ஒன்றிய அரசு இதுவரை எந்த தலையீடும் செய்யவில்லை. எப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யவில்லை. இலங்கை தூதரகத்தினுடைய உயர் அலுவலர்களை அழைத்து எந்த விதமான கண்டனமும் தெரிவிக்கவில்லை. குஜராத் மீனவர்களுக்கு ஒரு நியாயம், தமிழ்நாட்டு மீனவர்களுக்கு வேறொரு நியாயமா? பாகிஸ்தான் அரசு அணுகுமுறை என்றால் ஒன்று, இலங்கை அரசு குறித்த அணுகுமுறை என்றால் வேறொன்றா?.

இது வலிமையான கண்டனத்திற்கு உரியது. தமிழ்நாடு மீனவர்களுடைய மீன்பிடி உரிமையை முழுமையாக உறுதிப்படுத்தப்பட வேண்டும். இலங்கை கடற்படையினுடைய தாக்குதலுக்கு இந்த அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதை இந்த அவையிலே ஆணித்தரமாக வலியுறுத்த விரும்புகிறேன்," என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஒமைக்ரான் வகை எவ்வாறு மாறுபடுகிறது? அறிந்து கொள்ளுங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.