உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சர்வதேச சுற்றுலா மையமாக மேம்படுத்தப்படும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இக்கோயிலை மேலும் அழகுப்படுத்தும் விதமாக சர்வதேச சுற்றுலா மையமாக மாற்ற கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதனடிப்படையில், முதற்கட்டமாக கோயிலின் பொற்றாமரைக் குளத்தைச் சுற்றி ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கலைநயமிக்க வேலைப்பாடுகளுடன் கூடிய கருங்கல்லால் ஆன 50க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட உள்ளன.
இந்தத் தூண்கள் ஒன்றோடொன்று பித்தளையால் ஆன தடுப்புக் கம்பிகளுடன் இணைக்கப்பட உள்ளன. ஏற்கெனவே இருக்கக்கூடிய இரும்புக் கம்பிகள் அகற்றப்பட்டு, இந்த பித்தளை கம்பிகளால் ஆன தடுப்பு வேலிகள் அமைக்கப்படும்போது, சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பொற்றாமரைக்குளம் பொலிவு பெறும்.
அது மட்டுமின்றி தீ விபத்தால் சேதமான வீர வசந்த ராயர் மண்டப பகுதி 18 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும், குடமுழுக்கு விழா குறித்த அறிவிப்பு தமிழ்நாடு முதலமைச்சரால் விரைவில் வெளியிடப்படும் எனவும் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோயில் இடத்தை ஆக்கிரமித்த குளிர்பானக்கடை: மக்கள் சாலை மறியல்