மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயில் மற்றும் உபகோயில்களிலின் உண்டியல்கள் திறக்கப்பட்டன. இக்கோயிலின் இணை ஆணையர் நடராஜன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறையின் உதவி ஆணையர்கள் மு.ராமசாமி, ஜெ.முல்லை, கண்காணிப்பாளர்கள், மதுரை தெற்கு, வடக்கு ஆய்வாளர்கள், பக்தர் பேரவையினர், ஐயப்ப சேவா சங்கத்தினர், திருக்கோயில் பணியாளர்கள், வங்கி பணியாளர்கள் என சுமார் 329 பேர் கலந்துகொண்டு காணிக்கையை கணக்கிட்டனர்.
மேலும், தெப்பக்குளம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், முக்தீஸ்வரர் திருக்கோயில், செல்லூர் அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில், திருவாதவூர் அருள்மிகு திருமறைநாத சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட உபகோயில்களின் உண்டியலும் திறக்கப்பட்டதன.
இந்த உண்டியல்களிலிருந்து 88 லட்சத்து 26 ஆயிரத்து 113 ரூபாய், 557 கிராம் தங்கம், 945 கிராம் வெள்ளி, 484 அயல்நாட்டு ரூபாய் நோட்டுக்கள் ஆகியன பக்தர்களின் காணிக்கையாக கிடைக்கப் பெற்றுள்ளதாக மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: