ETV Bharat / city

"மணல் மாஃபியாக்களுக்குதான் தூத்துக்குடி போலிஸ் பாதுகாப்பு வழங்குவார்களா..." - உயர் நீதிமன்றம் வேதனை!

பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே காவல் துறையினர் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றால் ஏழை மக்கள் எங்கே செல்வார்கள் என மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்
author img

By

Published : Nov 23, 2020, 8:16 PM IST

Updated : Nov 23, 2020, 8:31 PM IST

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் உள்ள அகரம் கிராமத்தில் இரவு நேரங்களில் சட்ட விரோதமாக மணல் கடத்தல் நடைபெறுகிறது என்றும், இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், சட்டவிரோத மணல் குவாரிகளை நடத்துவோர் மீது உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரியும் பாலகிருஷ்ணன் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் வழக்கு தொடர்ந்த மனுதாரர் பாலகிருஷ்ணனை மனுவை திரும்பப் பெற வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த குவாரி உரிமையாளர் சிலர் கொலை மிரட்டல் விடுத்ததுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மனுதாரருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் மனுதாரருக்கு போலிஸ் காவல் வழங்க வேண்டும் என்றுகோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்று (நவ.23) நீதிபதிகள் கிருபாகரன்-புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வீடியோ கான்பரன்சில் ஆஜராகி வழக்கு குறித்து விளக்கம் அளித்தார்.

அதேபோல் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர் ஆகியோரும் ஆஜராகி இருந்தனர். அப்போது, மனுதாரரின் புகாரில் உண்மைத்தன்மை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நீதிபதிகள் ”மணல் கொள்ளை குறித்து வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதால் உயர் நீதிமன்றம் அவருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்டும் மனுதாரருக்கு ஏன் பாதுகாப்பு வழங்கப்படவில்லை” என்று கேள்வி எழுப்பினர்.

”உயர் நீதிமன்றம் ஒருவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய அலுவலர்கள் அவருக்கு பாதுகாப்பு வழங்காததன் மூலம், நீதிமன்றத்தின் உத்தரவை காவல் துறையினர் எந்த அளவிற்கு மதிக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. பொதுவாக தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை குறித்து மக்கள் மனதிலிருக்கும் வடு இன்னும் அகற்றப்படவில்லை. சாத்தான்குளம் சம்பவத்தை மக்கள் இன்னும் மறக்காமல் தான் உள்ளனர் என்பது உங்களுக்கு தெரியுமா?” என்றும் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து பேசிய அவர்கள், ”இத்தகைய சூழலில் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டால், தூத்துக்குடி காவல் துறையினரோ மணல் கடத்தலில் ஈடுபடும் மாஃபியாக்களுக்கு பாதுகாப்பாக செயல்பட்டு வருவது மிகவும் வேதனை அளிக்கிறது. பணம் இருப்பவர்களுக்கு மட்டும்தான் காவல் துறையினர் பாதுகாப்பு என்றால் ஏழை மக்கள் எங்கே செல்வார்கள்?

எனவே தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் மனுதாரருக்கு உடனடியாக காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைத்தனர்.

Last Updated : Nov 23, 2020, 8:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.