ETV Bharat / city

கடனை கட்ட இயலாத விவசாயி வீட்டுக்கு சீல்: தனியார் வங்கி நடவடிக்கை

மதுரை: திருமங்கலம் அருகே தனியார் வங்கியில் பெற்ற கடனை, கரோனா காரணமாக கடந்த ஓராண்டு காலமாக செலுத்த முடியாத விவசாயி வீட்டுக்கு நீதிமன்ற உத்தரவின்பேரில் சீல் வைக்கப்பட்டது.

கடனை கட்ட இயலாத விவசாயி வீடு சீல்: தனியார் வங்கி அதிரடி!

author img

By

Published : Feb 18, 2021, 5:03 PM IST

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே விருசங்குளம் கிராமத்தில் உள்ள சதீஷ்குமார் - செல்வி தம்பதியினருக்கு சௌந்தர்யா (17) வித்யா என்ற இரு மகள்கள் உள்ளனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு தனியார் (idfc) வங்கியில் ரூபாய் 4.5 லட்சம் சதீஷ்குமார் கடனுதவி பெற்றிருந்தார். அத்தொகையை வைத்து ஏழு பசு மாடுகள் வாங்கி தொழில் செய்துவந்தார். கடந்த ஒன்றரை ஆண்டு கரோனா காலம் வந்ததால், தவணை தொகையை கட்ட முடியாமல் அவர் தவித்துவந்துள்ளார்.

இந்நிலையில், தனியார் வங்கியிலிருந்து வழக்கறிஞர்கள் மூலமாக சதீஷ்குமார் வீட்டுக்கு வந்த ஊழியர்கள், அவர் இல்லாத நேரத்தில் வீட்டை பூட்டி சீல் வைத்து சென்றனர். அவருடைய ஆடைகள், குழந்தைகளின் படிப்பிற்கான புத்தகங்கள் எதனையும் எடுக்க முடியாமல் வீதியில் தள்ளப்பட்டுள்ளனர்.

கடனை கட்ட இயலாத விவசாயி வீடு சீல்: தனியார் வங்கி அதிரடி!

இதுகுறித்து பலமுறை தனியார் வங்கி நிர்வாகத்திடமும், காவல்துறையிடமும் முறையிட்டும் எந்த பலனும் ஏற்படாத காரணத்தால், தற்போது வீதியில் தள்ளப்பட்டுள்ளது சதீஷ்குமாரின் குடும்பம். இந்த சம்பவத்தில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்து தங்கள் குடும்பத்துக்கு உதவ வேண்டும் என்பது அக்குடும்பத்தினர் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க...கோயபல்ஸ் போல பரப்புரை செய்கிறார் ஸ்டாலின் - அமைச்சர் ஜெயக்குமார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.